மிரட்டும் மிக்ஜாம்! எந்த தேவைக்கு யாரை அழைக்கலாம்? அரசின் உதவி எண்கள் இதோ!

Michaung Storm Emergency Numbers by Government: தமிழகம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் மிக்ஜாம் புயல் நெருங்கி வருவதால் மழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்த நிலையில், அரசு அனைத்திற்கும் உதவி எண்களை அறிவித்திருக்கிறது. 

மிக்ஜாம் புயல் சென்னையை நோக்கி வந்து கொண்டிருப்பதையொட்டி, 4 மாவட்டங்களுக்கு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அவை சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு நாளை ஒரு நாள் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், தனியார் மற்றும் அரசு நிறுவனங்களுக்கும் நாளை விடுமுறை என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

1 /7

மிக்ஜாம் புயல் சென்னையை நெருங்கி வந்து கொண்டிருப்பதையொட்டி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதையடுத்து, தமிழக அரசு பல உதவி எண்களை அறிவித்துள்ளது. அந்த எண்கள் என்னென்ன? அவற்றை எப்படி, எங்கு பயன்படுத்தலாம் என்பதை இங்கு பார்ப்போம். 

2 /7

மழை காரணமாக வீடுகளுக்குள் பல விஷ ஜந்துக்கள் நுழைய வாய்ப்புகள் இருக்கின்றன. அப்படி விஷ ஜந்துக்கள் வீட்டிற்குள் வந்து விட்டால், 044-22200335 என்ற எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம். இந்த சேவை சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 27*7 செயல்படுகிறது. 

3 /7

வீட்டிற்குள் மழை நீர் புகுந்தாலோ அல்லது மழையில் சிக்கிக்கொண்டாலோ தொடர்பு கொள்ள சில உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 044-2519204, 044-2561209 மற்றும் 044-25619207 ஆகிய உதவி எண்களை தொடர்பு கொள்ளலாம். 

4 /7

மழையின் போது மின்துறையை 1912 என்ற எண்ணிலும், சுகாதாரத்துறையை 108 அல்லது 104 ஆகிய எண்ணிலும் தொடர்பு கொள்ளலம். காவல் துறைய 100, 112, 1931, 1073, 1091 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

5 /7

மழையினால் ரோட்டில் தண்ணீர் அதிகமாக தேங்கி நின்றால், கீழ்கண்ட உதவி எண்களில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். அப்படியில்லையெனில், தண்ணீர் தேங்கி நிற்கும் பகுதியை போட்டோ எடுத்து #ChennaiRains, #Chennaicorporations என்ற ஹேஷ்டேக்குகளை இணைக்கலாம். 

6 /7

மிக்ஜாம் புயல், நாளை ஆந்திராவில் கரையைகடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

7 /7

அரசு, பொதுமக்களை தேவையின்றி வெளியில் வரவேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளது. மெரினா உள்ளிட்ட கடற்கரைக்கு செல்லவும் மக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.