எச்சரிக்கை! 'இந்த' பிரச்சினைகள் இருந்தால் பால் அவ்வளவு நல்லதல்ல!

பால் ஆரோக்கியத்திற்கு மிகச் சிறந்தது என்பதால் அதனை சூப்பர் ஃபுட் என கூறுவார்கள். பச்சிளம் குழந்தைகளுக்கு பால் தான் முழுமையான உணவு. எனினும், சிலருக்கு பால் குடிப்பது பாதிப்பை ஏற்படுத்தலாம் என நிபுணர்கள் உணவியல் நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர் .

சாதாரணமான உடல்நிலையில் பால் குடிப்பது மிகச்சிறந்தது. ஆனால் சில குறிப்பிட்ட உடல்நல பிரச்சினைகள் இருந்தால் பால் குடிப்பதை தவிர்க்க வேண்டும் என்று உணவில் நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.

1 /7

சிறு வயது முதலே, பெரியவர்கள் பாலைத் தவறாமல் குடிக்க வேண்டும் என்று அறிவுறுத்துவதை நாம் நிச்சயம் கேட்டிருப்போம். எலும்புகளை வலுப்படுத்துவது முதல், ஆற்றலை அள்ளிக் கொடுப்பது வரை, பால் மற்றும் பால் பொருட்களில் இங்கு உள்ள ஆரோக்கிய நன்மைகள் ஏராளம்.

2 /7

கல்லீரல் கொழுப்பு அல்லது கல்லீரல் வீக்கம் போன்ற இருந்தால் பால் அருந்துவதை தவிர்க்க வேண்டும். கல்லீரலால் பாலை சரியாக ஜீரணிக்க முடியாமல் போகும் நிலையில், உடலில் கொழுப்பு அதிகரித்து செரிமான பிரச்சனைகள் ஏற்படும்.

3 /7

உடலில் வீக்கம் தொடர்பான பிரச்சனைகள் இருந்தால் பாலை தவிர்ப்பது நல்லது. பாலில் நிறைவுற்ற கொழுப்பு உள்ளதால், உடலில் உள்ள வளர்ச்சி மூலக்கூறுகள் அதிகரிக்கலாம். இது உடலில் மேலும் வீக்கத்தை அதிகரிக்கும்.

4 /7

ஹார்மோன் சமநிலையின்மை இருந்தால் பால் குடிப்பது கேடு விளைவிக்கும். பால் குடிப்பதால் உடலின் அண்ட்ரோஜன் மற்றும் இன்சுலின் அளவு அதிகரிக்கிறது. இது PCOS பிரச்சனையினால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உள்ள ஹார்மோன் சமநிலையின்மையை மேலும் அதிகரிக்கும்.

5 /7

செரிமான பிரச்சனைகள் உள்ளவர்கள் பால் குடிப்பதை தவிர்க்க வேண்டும். குறிப்பாக வயிற்று உப்புசம் மலச்சிக்கல் வாயு போன்றவை இருக்கும் சமயத்தில் பால் குடிப்பதால் இந்தப் பிரச்சினைகள் அதிகரிக்கும்.

6 /7

சிலருக்கு பால் ஒவ்வாமை பிரச்சனை இருக்கலாம். இவர்களுக்கு பால் எதிரில் ஜீரணம் ஆகாமல் ஏற்படுத்தும். பால் அருந்துவதால் இவர்களுக்கு வயிற்றுப்போக்கு, வீக்கம், வாயு போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.

7 /7

பொறுப்புத் துறப்பு: எங்கள் கட்டுரை தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே. மேலும் விவரங்களுக்கு எப்போதும் நிபுணர் அல்லது உங்கள் மருத்துவரை அணுகவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.