பிப்ரவரி மாத ராசிபலன்: உங்க ராசிக்கு இந்த மாதம் சாதகமா? பாதகமா?

Predictions for February 2023: பிப்ரவரி மாதம் பல முக்கிய கிரகங்களில் மாற்றங்கள் நிகழவுள்ளன. இதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். இது சில ராசிகளுக்கு சுப பலன்களையும் சில ராசிகளுக்கு அசுப பலன்களையும் அளிக்கும். இந்த மாதம் சில அதிர்ஷ்டக்கார ராசிகள் லட்சுமி அன்னையின் பரிபூரணமான ஆசியை பெறவுள்ளனர். சிலர் சில சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டி வரலாம். 

1 /12

மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் சுப பலன்களைத் தரும். உத்தியோகத்தில் நல்ல வாய்ப்புகள் கிடைப்பது மட்டுமில்லாமல், பதவி உயர்வுடன் பண லாபத்திற்கான சூழ்நிலையும் இருக்கும். 

2 /12

இந்த ராசிக்காரர்கள் தொழில் துறையில் சிறப்பாக செயல்படுவதுடன், புதிய வேலை வாய்ப்புகளும் கிடைக்கும். வரப்போகும் சவால்களை எதிர்கொள்ள முடியும். 

3 /12

மிதுன ராசிக்காரர்களுக்கு வியாபாரத்தில் நல்ல வெற்றி கிடைக்கும். பணம் சம்பாதிக்கும் வாய்ப்புகளும் வரும். நிதி நிர்வாகத்தை முறையாக பராமரிக்க வேண்டும். 

4 /12

 கடக ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் பண வரவை ஏற்படுத்திக்கொடுக்கும். நண்பர்களின் உதவியால் தொழிலில் விருத்தி ஏற்படும். அனுகூலமான சூழல் இருக்கும். 

5 /12

குடும்பத்தில் பல விருந்தினர்களின் வருகையால், வீட்டில் அனைவரும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். வரவிருக்கும் சவால்களை நீங்கள் சமாளிக்க முடியும். 

6 /12

கன்னி ராசிக்காரர்கள் தொழில் துறையில் நல்ல பலன்களைப் பெறுவார்கள், செயல்திறனும் சிறப்பாக இருக்கும், வரவிருக்கும் பிரச்சனைகளை எதிர்கொள்வார்கள்

7 /12

பணத்தை சேமிக்க இதுவே சரியான நேரம். திருமண வாழ்வில் சிறப்பான பலன்கள் காணப்படும். நண்பர்கள் மூலம் அனுகூலமான பல பலன்களை அடைவீர்கள். 

8 /12

விருச்சிக ராசிக்காரர்களுக்கு தொழில் ரீதியாக வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைக்கும், இது வாழ்க்கையில் முன்னேற மிகவும் உதவிகரமாக இருக்கும். 

9 /12

அலுவலகத்தில் தனுசு ராசிக்காரர்களின் பணி பாராட்டப்படும். தொழிலதிபர்கள் இந்த மாதம் நல்ல லாபம் ஈட்டுவது மட்டுமல்லாமல், புதிய வியாபாரத்திலும் கூட்டாண்மை ஏற்படலாம்.

10 /12

சூரியம் மற்றும் பிற கிரகங்களின் மாற்றத்தால் மன உளைச்சல் ஏற்படும். அன்பானவர்களின் ஆதரவு கிடைக்கும். குழந்தைகளால் மன கஷ்டம் ஏற்பட்டாலும், மாத நடுப்பகுதிக்கு மேல் அவர்களால் மகிழ்ச்சி உண்டாகும்.

11 /12

கும்ப ராசிக்காரர்களுக்கு பிப்ரவரி மாதம் மிகவும் சுபமாக இருக்கும். உங்கள் வேலையில் மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.

12 /12

குழந்தைகளின் படிப்பு மற்றிம் முன்னேற்றத்துக்கு இந்த மாதம் மிக நல்ல நேரமாக அமையும். மதிப்பும் மரியாதையும் கூடும். உங்கள் பணிகள் பாராட்டப்படும். 

You May Like

Sponsored by Taboola