ஆனி மாத செவ்வாயில் வரும் யோகினி ஏகாதசி விரதம்! நோன்பிருந்தால் நோவில்லை நோயில்லை!

Ekadashi Vratham 2024 July 2 : இந்து தர்மத்தில் ஏகாதசி தேதிக்கு சிறப்பு முக்கியத்துவம் உண்டு. ஒவ்வொரு மாதமும் பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை ஏகாதசி விரதம் வருகிறது. ஏகாதசி திதியில் விரதம் இருந்து விஷ்ணுவை வழிபடும் மரபு உள்ளது. 

ஏகாதாசி நாளில் தானம் செய்வதால் துன்பங்களில் இருந்து நிவாரணம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. ஆண்டொன்றுக்கு மொத்தம் 24 ஏகாதசிகள் உள்ளன, ஒவ்வொரு ஏகாதசியும் தனித்துவமான முக்கியத்துவம் பெற்றவை. காக்கும் கடவுளான விஷ்ணு பகவானை முறைப்படி ஏகாதசி விரதம் இருந்து வழிபடுவதால் வாழ்க்கை சிறக்கும்.

1 /6

பெருமாளை நினைத்து அனுஷ்டிக்கும் யோகினி ஏகாதசி விரதம் நாளை அதாவது ஜூலை மாதம் இரண்டாம் நாள் வருகிறது. நல்ல நேரம் மற்றும் வழிபாட்டிற்கான சரியான முறையை அறிந்து கொள்ளுங்கள்.

2 /6

யோகினி ஏகாதசி விரதம் ஆடி மாதம் ஏகாதசி தேதியில் அனுசரிக்கப்படுகிறது. இந்த விரதம் 02 ஜூலை 2024, செவ்வாய் அன்று அனுசரிக்கப்படும்.

3 /6

ஜூலை 01 ஆம் தேதி தொடங்கி, ஜூலை 02 ஆம் தேதி காலை 8:45 மணிக்கு முடிவடையும் ஏகாதசி திதி, உதய திதியின்படி நாளை 02 ஜூலை 2024 செவ்வாய்க் கிழமை அனுசரிக்கப்படுகிறது

4 /6

நாளை ஏகாதசி நாளில் காலை 11:15 மணி வரை திருத்தி யோகம் உருவாகி வருகிறது, இதனுடன் திரிபுஷ்கர யோகம் மற்றும் சர்வார்த்த சித்தி யோகமும் உருவாகிறது.

5 /6

3 யோகங்களும் ஜூலை 03 ஆம் தேதி காலை 08:42 மணி வரை நீடிக்கும் 

6 /6

ஜாதகத்தில் கிரக தோஷங்கள் உள்ளவர், இந்த விரதத்தை கடைபிடிப்பதால் கிரக தோஷங்கள் விலகும். இந்த சிறப்பு நாளில் பிறருக்கு உதவுவது நல்லது. இதனால் குடும்பத்தில் மகிழ்ச்சியும் செழிப்பும் வந்து சேரும்.