இன்னும் 42 நாட்களில் குரு பெயர்ச்சி, இந்த ராசிகளுக்கு பண வரவு, நல்ல நாட்கள் ஆரம்பம்

Jupiter Transit 2024: 27 நட்சத்திரங்களில் புனர்பூசம், விசாகம், பூரட்டாதி நட்சத்திரத்திற்கு அதிபதி குரு பகவான் ஆவார். அதன்படி இன்னும் 42 நாட்களில் குரு பகவான் தனது ராசியை மாற்றி ரிஷபத்தில் பெயர்ச்சி அடையப் போகிறார். இதனால்  எந்த ராசிகளின் அதிர்ஷ்டம், பண வரவு கிடைக்கப் போகிறது என்று இந்த கட்டுரையில் தெரிந்துக்கொள்வோம்.

Guru Peyarchi Palangal, Jupiter Transit 2024: ஜோதிடத்தின் படி நவகிரகங்களில் மங்களகரமான கிரகம் விழாயன் ஆகும். அதன்படி இந்த கிரகத்தின் பெயர்ச்சியானது மிகவும் முக்கியவாந்த நிகழ்வாகும், மேலும் வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே குரு பெயர்ச்சி நடக்கும். இந்நிலையில் இன்னும் 42 நாட்களில் அதாவது மே மாதம் 1 ஆம் தேதி மதியம் 02:29 மணிக்கு இந்த ஆண்டின் குரு பெயர்ச்சி ரிஷப ராசியில் (கார்த்திகை, ரோகிணி, மிருகஷீரிடம் உள்ளிட்ட நட்சத்திரங்களில் பயணம் செய்வார்) நடக்கப் போகிறார். இதனால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு பதவி உயர்வு, பண வரவு, சம்பள உயர்வு போன்றவை கிடைக்கும் என்று பார்ப்போம்.

1 /7

மேஷ ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சி நன்மை பயக்கும். பண பலன்களை தரும். தொழிலில் புதிய வாய்ப்புகள் கிடைக்கலாம். நீதிமன்ற தீர்ப்புகளில் சாதகமான முடிவைப் பெறுவீர்கள். வியாபாரிகளுக்கு சாதகமான நேரமாக அமையும்.   

2 /7

ரிஷப ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சியால் அபரிமிதமான செல்வம் பெருகும். வெற்றிகள் குவியும். தொழிலில் சாதகமான பலன் கிடைக்கும். பதவி உயர்வு, சம்பள உயர்வை பெறலாம். புதிய தொழில் தொடங்க சரியான நேரம். பண ஆதாயம் உண்டாகும்.  

3 /7

மிதுன ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சி அற்புதமான பலனைத் தருவார். வாழ்க்கையில் வெற்றி உண்டாகும். பொருளாதார நிலை மேம்படும். முதலீடு மூலம் லாபம் கிடைக்கும். எதிர்பாராத லாபம் பெறுவீர்கள்.

4 /7

சிம்ம ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சி சுப பலன் உண்டாகும். அலுவலகத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு பெறலாம். மரியாதை கூடும், திருமணமானவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும்.   

5 /7

கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த குரு பெயர்ச்சியால தொழிலில் வெற்றி கிடைக்கும். வேலையில் பதவி உயர்வு அல்லது புதிய வேலை வாய்ப்பு கிடைக்கலாம். நிதி ஆதாயம் உண்டாகும். புதிய வாய்ப்புகள் பெறலாம். போட்டித் தேர்வில் வெற்றி பெறலாம்.  

6 /7

"ஓம் ஷ்ரம் ஷ்ரீம் ஷ்ரௌம் ஸஹ் குரவே நமஹ!" தினமும் உச்சரிக்கவும்.

7 /7

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.