மகரத்தில் 3 கிரகங்களின் சங்கமம்: இந்த ராசிகளுக்கு விபரீத ராஜயோகம், நல்ல நேரம்

Saturn Mercury Venus Transit 2022: 2022 ஆம் ஆண்டின் கடைசி வாரம் ராசி மாற்றம் மற்றும் கிரகங்களின் சேர்க்கைக்கான மாதமாகும். டிசம்பர் 2022 கடைசி வாரத்தில் புதன் இரண்டு முறையும், சுக்கிரன் ஒரு முறையும் ராசிகளை மாற்றுகின்றன. மறுபுறம், சனியின் ராசியான மகரத்தில் புதன், சுக்கிரன், சனி ஆகியவை சந்திக்கவுள்ளன. 

பஞ்சாங்க குறிப்புகளின் படி, டிசம்பர் 28, 2022 அன்று புதன் கிரகம் தனுசு ராசியிலிருந்து விலகி மகர ராசிக்குள் நுழையும். மறுநாள் டிசம்பர் 29, 2022 அன்று சுக்கிரனும் தனுசு ராசியிலிருந்து விலகி மகர ராசிக்குள் நுழைகிறார். சனி ஏற்கனவே மகர ராசியில் அமர்ந்துள்ளார்.

1 /5

மகர ராசியில் புதன், சுக்கிரன், சனியின் சந்திப்பு பெரிய மாற்றத்தை கொண்டு வருகிறது. இந்த கிரகங்களின் சந்திப்பு 12 ராசிகளையும் பாதிக்கும். எனினும், 4 ராசிக்காரர்களுக்கு கிரகங்களின் இந்த நிலை மிகவும் சுபமாகவும் நன்மையாகவும் இருக்கும். அந்த ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.

2 /5

பணியிடத்தில் முன்னேற்றப் பாதை வலுவாக இருக்கும். புதிய தொழில் தொடங்கலாம். நிதிநிலை மேம்படுவதற்கான நல்ல யோகம் உருவாகும். தடைபட்ட பணிகள் முடிவடையும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். குடும்ப ஆதரவு இருக்கும்.

3 /5

மகர ராசியில் புதன், சுக்கிரன், சனி சஞ்சரிப்பதால் கன்னி ராசிக்காரர்களின் வாழ்வில் சுபகாலம் தொடங்கும். புதிய வேலை வாய்ப்புகள் வரும். மேலும் பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. நண்பரின் வருகையால் மனம் மகிழ்ச்சியடையும்.

4 /5

மீன ராசிக்காரர்கள் பணியிடத்தில் வெற்றி பெறுவார்கள். புதிய வேலை வாய்ப்பும் கிடைக்கும். வியாபாரத்தில் தொடர்புடையவர்கள் இந்த காலகட்டத்தில் நல்ல லாபம் பெறுவார்கள். வருமானம் அதிகரிக்கும்.

5 /5

கடக ராசிக்காரர்களுக்கு புதிய சொத்து வாங்கும் வாய்ப்பு உண்டு. வருமானம் பெருகும், பொருளாதார பலன்கள் உண்டாகும். திருமண வாய்ப்புகள் உண்டு. தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்.