செவ்வாய் பெயர்ச்சி: இன்னும் 7 நாட்களில் இந்த ராசிகளுக்கு பொற்காலம் ஆரம்பம், செழிக்கவைப்பார் செவ்வாய்

Mars Transit: ஜோதிட சாஸ்திரத்தின் படி அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தங்கள் ராசியை மாற்றுகின்றன. இவற்றின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும்

Mars Transit: கிரகங்களின் சேனாதிபதியாக கருதப்படும் செவ்வாய் மார்ச் 15 ஆம் தேதி சனியின் ராசியான கும்பத்தில் பெயர்ச்சியாக உள்ளார். இது மாபெரும் ஜோதிட நிகழ்வாக பார்க்கப்படுகின்றது. ஏற்கனவே கும்பத்தில் சுக்கிரனும், சனியும் இருப்பதால் சுக்கிரன், சனியுடன் கும்ப ராசியில் செவ்வாயின் சேர்க்கை நடக்கும். செவ்வாய் பெயர்ச்சியால் அனைத்து ராசிகளிலும் (Zodiac Signs) ஏற்படவுள்ள சுப மற்றும் அசுப பலன்களை பற்றி இந்த பதிவில் காணலாம்.

1 /12

மேஷ ராசி இளைஞர்களுக்கு கடின உழைப்பின் பலன் இப்பொழுது கிடைக்கும். அனுமனை வழங்கினால் அதிகப்படியான நற்பலன்கள் உண்டாகும். மூத்த சகோதரரின் ஆதரவு கிடைக்கும். அனைத்து முயற்சிகளிலும் வெற்றி பெறுவீர்கள்.

2 /12

ரிஷப ராசிக்காரர்கள் தங்கள் பேச்சில் கவனமாக இருக்க வேண்டியது அவசியமாகும். வீட்டில் உள்ளவர்களுடன் சண்டை சச்சரவு வர வாய்ப்புள்ளது. அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் வாக்குவாதம் ஏற்படலாம். பொறுமையை கடைபிடிக்க வேண்டியது மிக அவசியமாகும்.

3 /12

கும்ப ராசியில் சனியுடன் செவ்வாய் சேர்வதால் மிதுன ராசிக்காரர்களுக்கு நிதி நன்மைகள் உண்டாகும். பண வரவு அதிகமாகும். தொழிலில் லாபம் கிடைக்கும்.

4 /12

கடக ராசிக்காரர்களுக்கு நீண்ட நாட்களாக வாட்டி வதைத்து வந்த பல பிரச்சனைகளில் தீர்வு கிடைக்கும். ஆர்வம் அதிகரிக்கும். அலுவலகத்தில் உங்கள் பணி பாராட்டப்படும். நண்பர்கள் மற்றும் உறவினர்கள் முழுமையான ஆதரவு கிடைக்கும்  

5 /12

சிம்ம ராசிக்காரர்கள் மன சஞ்சலங்களால் பாதிக்கப்படுவீர்கள். உடன்பிறந்தவர்கள் மற்றும் நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. பண வரவு அதிகமாகும்.

6 /12

கன்னி ராசிக்காரர்களுக்கு மனம் சோர்வடையும் படி பல நிகழ்ச்சிகள் நடக்கலாம். மன திடத்துடன் செயல்பட்டால் வெற்றி அடைவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பது நல்லது.

7 /12

உங்களை வாட்டி வதைத்து வந்த பிரச்சினைகளை தீர்க்க நண்பர்கள் உதவுவார்கள். உறவினர்கள் மற்றும் நண்பர்களின் முழுமையான ஆதரவு கிடைக்கும். பணியிடத்தில் ஊதிய உயர்வும், சம்பள உயர்வும் கிடைக்க வாய்ப்புள்ளது  

8 /12

விருச்சிக ராசிக்காரர்களுக்கு குழப்பமான மனநிலை இருக்கும். முழு முனைப்புடனும் தெம்புடனும் செயல்பட்டால் பல காரியங்க வெற்றி காண்பீர்கள். உங்கள் இலக்கை நோக்கி பயணிக்கும் போது எந்தவித தடைகளையும் கண்டு அஞ்சக் கூடாது

9 /12

செவ்வாய் பயிற்சி காலத்தில் உங்கள் பேச்சில் கவனம் தேவை. தேவையில்லாத வாக்குவாதங்களில் ஈடுபடுவதை தவிர்க்கவும். வெளிநாட்டில் படிக்க எண்ணம் கொண்டவர்களுக்கு இப்பொழுது அதற்கான வாய்ப்பு கிடைக்கும்

10 /12

மகர ராசிக்காரர்களுக்கு இப்பொழுது மகிழ்ச்சியும் அமைதியும் அதிகமாக இருக்கும். இந்த காலத்தில் உங்கள் வாழ்க்கைத் துணையின் பரிபூரண ஆதரவும் அன்பும் உங்களுக்கு கிடைக்கும். பேச்சில் அமைதி இருக்கும். பலரும் உங்களைப் பாராட்டுவார்கள்

11 /12

கும்ப ராசிக்காரர்கள் தேவையில்லாத பிரச்சினைகளை மாட்டிக்கொள்ள நேரிடலாம். பணியிடத்திம், பொது இடங்களிலும் அமைதி காப்பது நல்லது. முதலீடு செய்யும் போது கவனம் தேவை

12 /12

மீன ராசிக்காரர்களுக்கு தாய் தந்தையின் ஆசீர்வாதம் கிடைக்கும். புதிய வியாபாரத்தை தொடங்கும் எண்ணம் இருந்தால் அதை இப்போது செய்யலாம். இந்த காலத்தில் செய்யப்படும் முதலீடுகளால் எதிர்காலத்தில் நல்ல பலன்கள் கிடைக்கும்.