உடல் பருமன் பிரச்சனையா? இந்த பருப்பு சாப்பிட்டா கொஞ்ச நாளில் ஒல்லியாகலாம், ட்ரை பண்ணுங்க

Weight Loss Tips: உடல் எடையை குறைப்பது அத்தனை எளிதான காரியம் அல்ல. இதற்கு நாம் பல வித முயற்சிகளை எடுக்க வேண்டும். உடல் எடை வேகமாக அதிகரித்து விடுகிது. ஆனால் இதை குறைக்க பல வித நடவடிக்கைகளை எடுக்க வேண்டியுள்ளது.

Weight Loss Tips: நம் உணவிலேயே பல வித மருத்துவ குணங்கள் உள்ளன. நாம் தினமும் உட்கொள்ளும் உணவைக் கொண்டே நமது உடல் எடையை குறைக்கலாம் என கூறினால் பலரால் நம்ப முடியாது. நமது தினசரி உணவின் ஒரு முக்கிய அங்கமான பருப்பு வகைகளை (Pulses) கொண்டு தொப்பை கொழுப்பையும் (Belly Fat), உடல் எடையையும் குறைக்கும் முறைகள் பற்றி இந்த பதிவில் காணலாம். 

1 /8

உடல் பருமன் இந்நாட்களில் பலரிடம் பரவலாக காணப்படும் ஒரு பிரச்சனையாக உள்ளது. இதனால் நம் உடலில் பிற குளறுபாடுகளும் ஏற்படுகின்றன. உடல் எடையை குறைக்க பலர் பல வித முயற்சிகளை எடுக்கிறார்கள். சிலர் ஜிம் செய்கிறார்கள், சிலர் கடுமையான உணவு கட்டுப்பாடுகளையும் மேற்கொள்கிறார்கள்.

2 /8

சில எளிய இயற்கையான வழிகளிலும் உடல் எடையை குறைக்கலாம். நாம் தினசரி உட்கொள்ளும் வருப்பு வகைகளை கொண்டும் எடையை குறைக்கலாம். எடை இழப்பு முயற்சியில் நமக்கு உதவக்கூடிய சில சூப்பர் பருப்புகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.

3 /8

காராமணி தட்டை பயறு என்றும் கூறப்படுகின்றது. ஒரு கப் காராமணியில் சுமார் 11 கிராம் நார்ச்சத்து உள்ளது. தனது பெயருக்கு ஏற்றவாறு இது தொப்பையை தட்டையாக வைக்க உதவுகின்றது. இது உடலுக்கு பல விதமான ஆரோக்கிய நன்மைகளையும் அளிக்கின்றது. 

4 /8

எடையை குறைக்க நினைப்பவர்கள் தங்கள் உணவில் பாசி பருப்பை பயன்படுத்தலாம். இதில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது. இது நம் வயிற்றுக்கு நிரம்பிய உணர்வை அளிக்கின்றது. இதில் பாஸ்பரஸ், ஃபோலேட், மெக்னீசியம், வைட்டமின் சி, இரும்புச்சத்து உள்ளிட்ட பலவித ஊட்டச்சத்துகள் உள்ளன.  

5 /8

அதிக நார்ச்சத்து உள்ள பருப்பு வகைகளில் ராஜ்மாவும் ஒன்று. இதை மதிய உணவில் உட்கொள்வது நல்லது. இது வயிற்றுக்கு நிறைவான உணர்வை அளிக்கின்றது. இதில் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான பல வித ஊட்டச்சத்துகளும் உள்ளன.   

6 /8

கொண்டைக்கடலை கொண்டு பல வித உணவு வகைகளை சமைக்கிறோம். இது பலருக்கு பிடித்தமான ஒரு கடலையாக உள்ளது. ஒரு கப் கொண்டைக்கடலையில் சுமார் 12 கிராம் நார்ச்சத்து உள்ளது. இதை உட்கொள்வதால் கொழுப்பு குறைந்து உடல் எடை குறைவதோடு பல வித ஆரோக்கிய நன்மைகளும் கிடைக்கின்றன. இது பசியை கட்டுப்படுத்துகிறது. 

7 /8

இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

8 /8

இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.