Weight Loss Tips: உடல் எடையை குறைக்க பலர் பல வித முயற்சிகளை எடுத்து வருகிறார்கள். உடல் பருமனால் ஒருவருடைய ஆளுமை குறைவதோடு பல வித உடல் நல கோளாறுகளும் ஏற்படுகின்றன.
Weight Loss Tips: உடல் எடையை குறைக்க சிலர் ஜிம் செல்கிறார்கள், சிலர் கடினமான உணவு கட்டுப்பாடுகளையும் மேற்கொள்கிறார்கள். எனினும் சில எளிய, இயற்கையான வழிகளிலும் உடல் எடையை குறைக்கலாம். இரவில் சில பானங்களை குடிப்பதால், தொப்பை கொழுப்பு குறைவதோடு, உடல் எடையும் வேகமாக குறையும். அவற்றை பற்றி இங்கே காணலாம்.
உடல் எடையை குறைக்க நாம் எடுக்கும் முயற்சியால் எந்த வித பக்க விளைவுகளும் ஏற்படாமல் இருப்பதை நாம் உறுதி செய்துகொள்ள வேண்டும்.. இரவில் சில பானங்களை குடிப்பதன் மூலம் எடையை குறைக்கலாம். அவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.
எலுமிச்சை சாறு: அதிக அளவு வைட்டமின் சி உள்ள எலுமிச்சை சாறு உடலின் வளர்சிதை மாற்றத்தை விரைவுபடுத்தி, கலோரிகளை வேகமாக எரிக்கிறது. இது உடல் எடையையும் தொப்பை கொழுப்பையும் விரைவாக குறைக்க உதவுகின்றது.
கிரீன் டீ: கிரீன் டீ சமீப காலங்களில் பிரபலமாகி வரும் ஒரு பானமாகும். இதில் அதிக அளவில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இரவில் தூங்கும் முன் இதை குடிப்பதால் உடலின் வளர்சிதை மாற்றம் மேன்மையடையும். இது உடல் எடையை குறைக்க உதவுகின்றது.
தேனுடன் வெந்தய நீர்: வெந்தயத்தை தண்ணீரில் ஊறவைத்து, பின்னர் அந்த தண்ணீரில் தேன் கலந்து குடித்தால் உடல் எடை குறையும். வெந்தயத்தில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது, இது பசியைக் குறைக்க உதவும். இது கலோரிகளை எரிப்பதிலும் பயனுள்ளதாக இருக்கும்.
வெதுவெதுப்பான நீரில் தேன்: வெதுவெதுப்பான நீரில் தேன் கலந்து குடிப்பதால் உடல் எடை வேகமாக குறையும். தேனில் இருக்கும் பண்புகள் உடலின் நெகிழ்வுத்தன்மையை பராமரிக்க உதவுகின்றன. இது நோய் எதிர்ப்பு சக்தியியையும் அதிகரிக்கின்றது.
இலவங்கப்பட்டை நீர்: :இலவங்கப்பட்டை செரிமான ஆரோக்கியத்திற்கு சிறந்த பானமாக கருதப்படுகின்றது. செரிமானம் நன்றாக இருந்தால் வளர்சிதை மாற்றம் மேன்மையடையும். இது உடல் எடையை குறைக்க உதவும்.
எலுமிச்சை சாறில் கருப்பு உப்பு: எலுமிச்சை சாறில் கருப்பு உப்பு சேர்த்து குடிப்பதால் தொப்பை கொழுப்பை கரைத்து உடல் எடையை வேகமாக குறைக்கலாம். இது எளிதாக உடலில் உள்ள நச்சுகளையும் வெளியேற்றும்.
பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.