Benefits of Walking: தினமும் வாகிங் செய்வதால் ஏற்படும் நன்மைகள் என்ன? இதனால் எந்தெந்த பிரச்சனைகளுக்கு நிவாரணம் கிடைக்கும்?
நடைபயிற்சி நமது ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளை வழங்கும் எளிமையான மற்றும் ஆரோக்கியமான பயிற்சி முறையாகும். நடைபயிற்சி நமது உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். தினமும் நடைபயிற்சி செய்தால் கிடைக்கும் நன்மைகள் ஏராளம். அவற்றை பற்றி இந்த பதிவில் விரிவாக காணலாம்.
நடைபயிற்சி மன அழுத்தத்தையும் பதட்டத்தையும் குறைக்க உதவும். இது மனநிலையை மேம்படுத்தவும், மனச்சோர்வின் அறிகுறிகளைக் குறைக்கவும் உதவும்.
கலோரிகளை எரிக்க நடைபயிற்சி ஒரு சிறந்த வழியாகும். நீங்கள் உடல் எடையை குறைக்க விரும்பினால், தினமும் 30 நிமிடங்கள் நடக்க முயற்சிக்கவும்.
நடைபயிற்சியின் போது இரத்த நாளங்கள் திறக்க தொடங்கும். இதனுடன், இந்த இரத்த நாளங்களில் சிக்கியுள்ள கொலஸ்ட்ரால் துகள்களும் உருக ஆரம்பிக்கின்றன. நடைப்பயிற்சி இதய துடிப்பு மற்றும் இரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. இது இதய நோய், பக்கவாதம் மற்றும் இதயம் தொடர்பான பிற பிரச்சனைகளின் அபாயத்தைக் குறைக்க உதவும்.
டைப் 2 நீரிழிவு நோயாளிகளுக்கு நடைப்பயிற்சி இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவும். இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும், உடலை ஆரோக்கியமாக வைக்கவும் நீரிழிவு நோயாளிகளுகளுக்கு நடைபயிற்சி மிக முக்கிய தீர்வாக காணப்படுகின்றது.
நடைபயிற்சி சில வகையான புற்றுநோய்களின் அபாயத்தைக் குறைக்க உதவும்.
மூட்டுகள் சம்பந்தமான நோய் ஏதேனும் இருந்தால், விறுவிறுப்பான நடைபயிற்சி இதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அரை மணி நேரம் வேகமான வழக்கமான நடைபயிற்சி, மூட்டுகளில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. மூட்டுகளின் நிலை மேம்படும். இதன் காரணமாக அதன் செயல்பாடு சிறப்பாக இருக்கும். அதுமட்டுமின்றி உடலின் எலும்புகளும் வலுவாகும்.
நடைப்பயிற்சி நினைவாற்றலையும் கற்றலையும் மேம்படுத்த உதவும். இது அல்சைமர் மற்றும் பிற டிமென்ஷியா அபாயத்தைக் குறைக்கவும் உதவும்.
நுரையீரல் பிரச்சனை உள்ளவர்களுக்கு, விறுவிறுப்பான நடைப்பயிற்சி ஒரு வரப்பிரசாதம் போன்றது. நடைப்பயிற்சியின் மூலம், தூய காற்று நுரையீரலுக்குள் நுழைகிறது. அதன் பிறகு ஆக்ஸிஜன் சப்ளை மேம்படும். இதன் காரணமாக நுரையீரல் வலுவாகவும் ஆரோக்கியமாகவும் மாறும். அதே சமயம் விறுவிறுப்பான நடைப்பயிற்சி மற்ற பிரச்சனைகளை ஏற்படுத்தாது.