நாய்களுக்கும் நீரிழிவு நோய் வருமா? இவைதான் ஆரம்ப அறிகுறிகள்!

நீரிழிவு நோயால் மனிதர்கள் தான் அதிகமாக அவதிப்பட்டு வருகிறார்கள் என்று நினைத்திருப்போம், ஆனால் நாய்களும் நீரிழிவு நோயினால் பாதிக்கப்படுகின்றன.

 

1 /5

வளர்சிதை மாற்ற கோளாறால் நடுத்தர வயது மற்றும் 4-14 வயதுடைய நாய்கள் மிகவும் எளிதில் பாதிக்கப்படுகின்றன.  ஆண்களை விட பெண் நாய்களுக்கு நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்பு இரண்டு மடங்கு அதிகம்.  

2 /5

நாய் அதிகமாக தண்ணீர் குடித்தால், அதிகமாக சிறுநீர் கழித்தால், பசியின்மை அதிகரித்தாலோ அல்லது குறைந்தாலோ, கண்கள் மேகமூட்டமாக இருந்தாலோ அல்லது மீண்டும் மீண்டும் நோய்த்தொற்றுகளால் அவதிப்பட்டாலோ உடனே நீங்கள் நீரிழிவு நோய் பரிசோதனை செய்யவேண்டும்.  

3 /5

நோய் பாதித்த நாய்களுக்கு ஊட்டச்சத்து நிரம்பிய ஒரு சீரான உணவை அளிக்கவேண்டும், அவற்றை சுறுசுறுப்பாக இயங்க செய்யுங்கள்.  

4 /5

நாய்களுக்கு நீரிழிவு நோய் என்பது இப்போது பொதுவானதாக மாறிவிட்டது, அதனால் நோய் இருப்பதை ஆரம்ப காலத்திலேயே கண்டறிந்துவிட்டால் நாயின் ஆரோக்கியத்தை நீங்கள் மேம்படுத்தலாம்.  

5 /5

நாயின் உணவில் அதிக நார்ச்சத்து சேர்ப்பது, தினசரி உடற்பயிற்சி மற்றும் எடையை நிர்வகிப்பது போன்றவற்றை செய்வதன் மூலம் கல்லீரல், கண்புரை, யுடிஐ, சிறுநீரக செயலிழப்பு போன்ற சிக்கல்கள் உருவாவதை தடுக்கலாம்.