உங்கள் பகுதியில் Petrol-Diesel விலையை எவ்வாறு தெரிந்துக்கொள்வது!

Petrol Diesel Price Updates: பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் ஒவ்வொரு நாளும் மாறுகின்றன. தினமும் காலை 6 மணிக்கு பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாறுகிறது. புதிய கட்டணங்கள் காலை 6 மணி முதல் அமலுக்கு வருகிறது. 

ALSO READ |  Petrol Diesel Prices: மலிவாகப்போகிறது பெட்ரோல்-டீசல் விலை! அரசாங்கத்தின் முடிவு என்ன?

1 /5

அதிகரித்து வரும் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் கவனத்தில் கொண்டு, நீங்கள் உங்கள் வாகனத்தில் பெட்ரோல் போடுவதற்கு முன்பே, உங்கள் பகுதியில் பெட்ரோல் டீசல் விலையைக் குறித்து அறிந்துக்கொள்வது முக்கியமாகும்.

2 /5

SMS மூலம் பெட்ரோல் டீசலின் விலையை நீங்கள் அறியலாம். பெட்ரோல் டீசல் விலை தினமும் காலை 6 மணிக்கு புதுப்பிக்கப்படும்.

3 /5

இந்தியன் ஆயிலின் வலைத்தளத்தின்படி, நீங்கள் உங்கள் நகரக் குறியீட்டை RSP-யுடன் தட்டச்சு செய்து 9224992249 என்ற எண்ணுக்கு SMS அனுப்ப வேண்டும். ஒவ்வொரு நகர குறியீடும் வேறுபட்டது. ஐ.ஓ.சி.எல் வலைத்தளத்திலிருந்து இதை பெறலாம். 

4 /5

உங்கள் நகரத்தில் பெட்ரோல் டீசல் விலையை BPCL வாடிக்கையாளர் RSP 9223112222 மற்றும் HPCLவாடிக்கையாளர் HP Price-க்கு 9222201122 செய்தியை அனுப்புவதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்  

5 /5

சென்னையில் (Chennai) பெட்ரோல் ரூ. 93.11 ஆகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 86.45 ஆகவும் உள்ளது (மார்ச் 3, 2021)