OnePlus 9R 5G: அதிரடி தள்ளுபடியுடன் இந்தியாவில் விற்பனை துவக்கம்: விலை, பிற விவரங்கள் இதோ

ஸ்மார்ட்போன் பிரியர்களுக்கு ஒரு நல்ல செய்தி!! OnePlus 9R-ன் விற்பனை (Sale) இந்தியாவில் தொடங்கி விட்டது. சேலில், இந்த ஸ்மார்ட்போனை ஆஃப்லைனில் கடைகளிலும் வாடிக்கையாளர்கள் வாங்க முடியும்.

முன்னதாக, இந்த ஸ்மார்ட்போன் அமேசான் பிரைம் மற்றும் ரெட் கேபிள் கிளப் உறுப்பினர்களுக்கு மட்டுமே கிடைத்துக்கொண்டிருந்தது.

1 /5

ஒன்பிளஸ் இந்த ஸ்மார்ட்போனை OnePlus 9 தொடருடன் கடந்த மாதம் அறிமுகப்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஸ்மார்ட்போனிலும் ஒன்பிளஸ் 9 போன்ற அம்சங்களே கிடைக்கின்றன. இருப்பினும், இந்த ஸ்மார்ட்போனில் சிறிய மாற்றங்களும் உள்ளன. இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 870 பிராசசர் மற்றும் 5G இணைப்புடன் கிடைக்கிறது.   

2 /5

OnePlus 9R ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை ரூ .39,999 ஆகும். 8GB ரேம் + 128GB ஸ்டோரேஜ் கொண்ட வகைக்கு இந்த விலை நிர்ணயிக்கப்படுள்ளது. 122GB ரேம் + 256GB ஸ்டோரேஜ் வகையின் விலை ரூ .43,999 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் கார்பன் பிளாக் மற்றும் லேக் ப்ளூ வண்ணங்களில் கிடைக்கும். 

3 /5

Amazon.in, OnePlus.in மற்றும் ஒன்ப்ளஸின் ஆஃப்லைன் கடைகளிலிருந்தும் இந்த ஸ்மார்ட்போனை வாங்கலாம். SBI கிரெடிட் கார்டு மற்றும் EMI பரிவர்த்தனைகளில் இந்த ஸ்மார்ட்போனில் 2000 ரூபாய் உடனடி தள்ளுபடி கிடைக்கிறது. மேலும், இதில் நோ காஸ்ட் EMI மற்றும் Jio-வின் சலுகைகளும் கிடைக்கின்றன. 

4 /5

OnePlus 9R ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 ஐ அடிப்படையாகக் கொண்ட OxygenOS 11 இல் இயங்குகிறது. தொலைபேசியில் 6.5 இன்ச் Full-HD+ (1,080×2,400 pixels) OLED டிஸ்ப்ளே உள்ளது. இது 120Hz ரெஃப்ரெஷ் ரேட்டுடன் வருகிறது. ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 870 பிராசசர் இந்த தொலைபேசியில் கிடைக்கிறது. 12GB ரேம் வரையிலான ஆப்ஷன் இதில் கிடைக்கிறது. 

5 /5

இந்த ஸ்மார்ட்போன் குவாட் ரியர் கேமரா அமைப்புடன் வருகிறது. இதன் பிரதான லென்ஸ் 48MP-ஐக் கொண்டுள்ளது. இது தவிர, தொலைபேசியில் 162MP அல்ட்ரா வைட் ஆங்கிள் லென்ஸ், 5 MP மேக்ரோ லென்ஸ் மற்றும் 2MP மோனோக்ரோம் ஷூட்டர் ஆகியவை உள்ளன. முன்பக்கத்தில் 16MP கேமரா உள்ளது. இதில் 256GB வரையிலான ஸ்டோரேஜும் கிடைக்கிறது. இணைப்பிற்கு, இதில் 5G, 4G LTE, வைஃபை 6, புளூடூத் v5.1, GPS/ A-GPS, NFC ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இந்த தொலைபேசி இண்டிஸ்பிளே ஃபிங்கர் பிரிண்ட் சென்சாருடன் வருகிறது.  தொலைபேசியில் 4500mAh பேட்டரி உள்ளது. இது 65W சார்ஜிங்கை ஏதுவாக்குகிறது.