உங்கள் தினசரி உணவில் தேனை சேர்ப்பதால் என்னென்ன பயன்கள் ஏற்படும் தெரியுமா

நாம் நமது வரலாற்றை சற்று திருப்பிப் பார்த்தால் பல்வேறு நோய்களுக்கு ஒரு சரியான தீர்வாக தேன் இருந்துள்ளது என்பதை தெரிந்துகொள்ள முடியும். 

தேன் பலவிதமான சுகாதார நன்மைகள் மற்றும் மருத்துவ பயன்பாடுகளைக் கொண்டுள்ளது.

1 /5

தேன் மிகவும் பிரபலமான மற்றும் பரவலாக பயன்படுத்தப்படும் இனிப்பு வகைகளில் ஒன்றாகும். தேனில் செய்யப்படும் கலப்படம் அதன் சத்தான திறன்களின் ஆற்றலைக் குறைக்கிறது. தேனால் ஏற்படும் அன்றாட பயன்கள் ஏராளம். (Pic courtesy: IANS, Pixabay)  

2 /5

ஒரு கப் மிதமான சூடு கொண்ட தேநீர் அல்லது நீரில் தேனை சேர்த்து உட்கொண்டால், அது தொண்டை புண்ணை குணப்படுத்தி இருமலை கட்டுப்படுத்துகிறது.

3 /5

தேன் ஒரு சக்திவாய்ந்த ப்ரீபயாடிக் ஆகும். அதாவது இது குடலில் வாழும் நல்ல பாக்டீரியாக்களை வளர்க்கிறது. நல்ல பாக்டீரியாக்கள் செரிமானத்திற்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் முக்கியமானவை.

4 /5

ஆன்டிஆக்ஸிடண்ட்கள் உங்கள் உடலில் ஏற்படும் செல் சேதத்திலிருந்து உங்களை பாதுகாக்க உதவுகின்றன. தேனில் ஆன்டிஆக்ஸிடண்டுகளாக செயல்படும் பல தாவர இரசாயனங்கள் உள்ளன.

5 /5

தேன் ஒரு இயற்கை இனிப்பு மூலமாக கருதப்படுகிறது. உடற்பயிற்சியால் ஏற்படும் சோர்வை எதிர்த்துப் போராட தேன் மிகவும் உதவியாக இருக்கிறது. உடலுக்கு உடனடி ஆற்றல் தேவைப்பட்டால், அதற்கு தேனை விட ஒரு சிறந்த தீர்வு இருக்க முடியாது.