குரு பெயர்ச்சி 2025... கஜகேசரி யோகத்தினால் இந்த ராசிகள் நினைத்ததெல்லாம் நடக்கும்

Guru Peyarchi 2025: 2025 ஆண்டில், குரு பகவானும் சந்திரனும் மிதுனத்தில் ஒன்றாக இணைகின்றன. இந்த இணைவினால் கஜகேசரி யோகம் உருவாகிறது. இதனால் 12 ராசிகள் மீதும் ஏதோ ஒரு வகையில் தாக்கம் ஏற்படவுள்ளது. இந்த தாக்கம் சுப பலன்களையும் அளிக்கலாம் அல்லது அசுப பலன்களையும் அளிக்கலாம். 

கிரகங்களின் நிலையில் ஏற்படும் மாற்றங்கள் நம் வாழ்வில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அதிலும், சனி பகவான், குரு பகவனின் நிலைகளில் ஏற்படும் மாற்றம், அதன் பெயர்ச்சிகள், அதனால் உருவாகும் சேர்க்கைகள், உருவாகும் அற்புத யோகங்கள் பல வகைகளில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இந்நிலையில், 2025 குரு பெயர்ச்சியும் அதனால் உருவாகும்  கஜகேசரி யோகமும் யாருக்கு அதிர்ஷ்டத்தை அள்ளித்தரப்போகிறது என்பதை அறிந்து கொள்ளலாம்.

1 /8

குரு பெயர்ச்சி 2025: ஜோதிட சாஸ்திரத்தின் படி, குரு பகவான் ஒரு ராசியில் சஞ்சரிப்பது 12 மாதங்கள் நீடிக்கும். பெயர்ச்சி காலத்தில், குரு பெயர்ச்சி, குருவின் வக்ர பெயர்ச்சி அனைத்தும்  அடங்கும். குரு பகவான் 2025ம் ஆண்டு மே 14 ஆம் தேதி, ரிஷப ராசியில் இருந்து மிதுனத்திற்கு பெயர்ச்சியாகிறார். இதனால், 12 ஆண்டுகளுக்குப் பிறகு மிதுனத்தில் குரு பகவான் சந்திரன் சேர்க்கை நடைபெறும்.

2 /8

கஜகேசரி யோகம்: சந்திரனும் குருபகவானும், ஏதேனும் ஒரு ராசியில் இணையும் போது, கஜகேசரி யோகம் உண்டாகும் என்பது ஜோதிட விதி. இது தவிர, குரு பகவானும் சந்திரனும் கேந்திர வீட்டில் அதாவது நான்காவது, ஏழாவது அல்லது பத்தாம் வீட்டில் இருக்கும் போதும் கஜகேசரி யோகம் உருவாகும். கஜகேசரி யோகத்தால் 2025ம் ஆண்டில் அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிகளை பற்றி இப்போது தெரிந்துகொள்ளலாம். இவர்கள் நினைத்த காரியம் அனைத்தும் நிறைவேறும்.

3 /8

மிதுனம்: 2025ம் ஆண்டு மே 28 ஆம் தேதி மிதுன ராசியில் குரு பகவான் மற்றும் சந்திரன் இணையும் நிலையில், மிதுனத்திற்கு நேரம் இங்கிருந்து தொடங்கும். ஆன்மீக காரியங்களில் ஆர்வம் உண்டாகும். அறிவுத்திறன் மற்றும் செயல்திறனினால் பயனடைவீர்கள். நிதி பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள்.  உங்கள் குடும்ப வாழ்க்கையும் இனிமையாக இருக்கும். உங்கள் பேச்சுத்திறன் மற்றும் நடத்தை மூலம் கடினமான பணிகளை கூட எளிதாக செய்து முடிப்பீர்கள்.

4 /8

கன்னி: குரு பெயர்ச்சி மற்றும் கஜ கேசரி யோகம், கன்னி ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும். எடுத்த காரியம் அனைத்திலும் வெற்றி பெறுவார்கள். வெளியூர் பயணம் அல்லது வெளியூர் வேலை செய்ய விரும்புபவர்கள் முயற்சி செய்தால் வெற்றி கிடைக்கும். வாகனம் வாங்கும் வாய்ப்பும் கிடைக்கும். நீங்கள் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியைக் காண்பீர்கள்.

5 /8

துலாம்: குரு பகவானும் சந்திரனும் துலாம் ராசியின் ஒன்பதாம் வீட்டில் இணைவதால் கஜகேசரி யோகம் உருவாகும். இதனால், நேர்மறையான உணர்வுகள் நிறைந்திருக்கும். மூதாதையர் சொத்து தொடர்பான பிரச்னைகள் தீரும். வீடு, மனை போன்ற கனவில் இருப்பவர்களின் கனவுகள் நிறைவேறும். உங்கள் திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். ஆன்மீக பயணத்தின் அதிர்ஷ்டத்தையும் பெறலாம். நிதி ஆதாயம் சிறப்பாக இருக்கும்.

6 /8

தனுசு: குரு பகவானும் சந்திரனும் தனுசு ராசியின் ஏழாவது வீட்டில் இணைவதால் உருவாகும் கஜகேசரி ராஜயோகம் காரணமாக குடும்ப வாழ்க்கை இனிமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கும். நிதி ஆதாயம் மகிழ்ச்சியைக் கொடுக்கும். திருமண யோகம் கை கூடி வரும். பொருளாதாரத் துறையில் முன்னேற்றம் ஏற்படும். வாகனம் வாங்கும் யோகம் வரும்.

7 /8

கும்பம்: குரு பெயர்ச்சி மற்றும் கஜ கேசரி யோகம், கும்ப ராசியினருக்கு சுப பலன் தரும். கும்ப ராசிக்காரர்கள் ஏழரை நாட்டு சனியின் தாக்கத்தில் இருந்து விடுபட்டு, தொழிலில் முன்னேற்றம் பெறுவார்கள். பணப் பலன்களையும் பெறுவீர்கள். வேலை, தொழில், கல்வி என அனைத்துத் துறையிலும் வெற்றி பெறுவார்கள். ஆன்மீக காரியங்களிலும் ஆன்மிக விஷயங்களிலும் பங்கேற்பதால் நற்பலன் உண்டாகும்.

8 /8

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இந்தத் தகவல்களுக்கு ZEE News பொறுப்பேற்காது.