NPS account வைத்திருப்பதால் இத்தனை நன்மைகளா? திறக்கும் முறை, நன்மைகள் உள்ளே…

என்.பி.எஸ் (NPS) அதாவது புதிய ஓய்வூதிய திட்டம் (New Pension Scheme) ஓய்வு பெற்ற பிறகு செலவுகளை ஈடுகட்ட உதவும் ஒரு நல்ல திட்டமாகும். சந்தை வல்லுநர்களின் கூற்றுப்படி, இந்த ஓய்வூதிய திட்டத்தில் அனைவரும் சப்ஸ்க்ரைப் செய்யலாம்.  NPS மீதான தனியார் நிறுவனங்களின் ஈடுபாடும் அதிகரித்து வருகிறது. 

PFRDA நிறுவனங்களை என்.பி.எஸ்ஸில் சேர ஊக்குவிக்கிறது. PFRDA வின் படி, நிறுவனங்கள் என்.பி.எஸ் திட்டத்தை ஏற்றுக்கொண்டால், அந்தந்த நிறுவனங்களின் ஊழியர்கள் நன்றாக பயனடைவார்கள். கடந்த ஆண்டு NPS-ல் கிடைத்த வருமானமும் அருமையாக இருந்தது.

1 /5

இதுவரை 8,000 நிறுவனங்கள் என்.பி.எஸ். ஓய்வூதியத் திட்டத்தில் பதிவு செய்துள்ளன. ஓய்வூதியத் திட்டம் மற்றும் அடல் ஓய்வூதிய திட்டம் (APY) ஆகியவற்றின் கீழ், மொத்த மதிப்பு 5.05 லட்சம் கோடி ரூபாயைத் தாண்டியுள்ளது. கார்ப்பரேட் துறையின் பங்களிப்பு 10 சதவீதம் ஆகும்.

2 /5

Wealth Management at Transcend Consultants-ன் மேலாளர் கார்த்திக் ஜாவேரியின் கூற்றுபடி, என்.பி.எஸ்-ஸில் முதலீடு செய்ய இரண்டு வழிகள் உள்ளன. முதல் ஆப்ஷன் – ஆக்டிவ் மோட். இதன் கீழ் முதலீட்டாளர் ஒவ்வொரு ஆண்டும் தங்கள் வருமானத்தைப் பார்த்து, அதற்கேற்ப பங்குகள் மற்றும் கடன்களுக்கான ஆப்ஷன்களை மாற்ற முடியும்.

3 /5

Auto mode ஆப்ஷனில், 8 நிதி மேலாளர்கள் முதலீட்டாளரின் பணத்தைக் கையாளுகின்றனர். சந்தை போக்குக்கு ஏற்ப பங்கு மற்றும் கடனின் அளவுகளை அவர்கள் மாற்றிக் கொண்டே இருப்பார்கள். NPS-ல் முதலீடு செய்தால், வருமான வரியின் 80CCD பிரிவின் கீழ் வருமான வரி விலக்கு கிடைக்கும்.

4 /5

அகௌண்டு திறக்க, புதியவர்கள் Kyc-க்காக எந்த ஆவணங்களையும் வழங்க வேண்டியதில்லை. ஆஃப்லைன் ஆதார் மூலமே கணக்கைத் திறக்கலாம், அதன் புகைப்பட நகலும் கொடுக்கத் தேவையில்லை.

5 /5

சாத்தியமான பங்குதாரர்களின் ஒப்புதலுடன் ஆஃப்லைன் ஆதார் மூலம் NPS கணக்கைத் திறக்க PFRDA ஏற்கனவே E-NPS / பாயிண்ட் ஆஃப் பிரசென்ஸ் மையங்களுக்கு (என்.பி.எஸ் கணக்கு திறக்கப்பட்ட இடத்தில்) அனுமதி அளித்துள்ளது.