உடல் எடையை குறைப்பதற்காக, பலர் தங்கள் உணவில் இருந்து கொழுப்பைக் குறைக்கும் வகையில் உணவு வகைகளை தேர்வு செய்கிறார்கள். சிலர் ஜிம்மிற்குச் சென்று நாள் முழுவதும் கடினமாக உழைக்கிறார்கள், இதனால் கொழுப்பு விரைவில் குறைகிறது.
ஆனால் இதற்கிடையில், உடல் எடையை குறைக்க ஒருவர் செய்த விஷயத்தைப் பார்த்தால், நீங்கள் அசந்து போவீர்கள், ஆச்சரியப்படுவீர்கள்!! அட, அப்படி என்னதான் செய்தார்? வாருங்கள் பார்க்கலாம்!!
ஆச்சரியப்படும் வகையில், ஒருவர் நாள் முழுவதும் பீர் மட்டுமே குடித்து தனது எடையைக் குறைத்துள்ளார். பீர் குடித்தால் எடை எப்படி குறையும் என்ற கேள்வி அனைவரின் மனதிலும் வரும். அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவர் பீர் குடித்து 18 கிலோ எடையைக் குறைத்துள்ளார்.
சின்சினாட்டி.காம் படி, அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் வசிக்கும் இந்த நபரின் பெயர் டெல் ஹால் (Del Hall). அவர் பசியுடன் இருக்கும்போது சாப்பிடுவதற்கு பதிலாக பீர் குடிக்க முடிவு செய்தார். ஒரு நாளைக்கு 2 முதல் 5 முறை பீர் குடிக்க முடிவு செய்து, பச்சை காய்கறிகள் மற்றும் சில லேசான உணவை மட்டுமே சாப்பிட்டார்.
டேல் ஹால் ஒவ்வொரு நாளும் தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் உடல் எடையின் அளவுகளை படம்பிடித்து அப்லோட் செய்து வந்தார். ஆரம்பத்தில், கொஞ்சம் சிக்கல் ஏற்பட்டது, ஆனால் பின்னர் அவர் உடல் எடையை குறைக்க ஆரம்பித்தபோது, அவருக்கும் ஆச்சரியம் ஏற்பட்டது. அவர் தனது வாழ்க்கைமுறையில் சில மாற்றங்களை செய்தார். 47 நாட்களுக்குள், 18 கிலோவை இழந்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.
ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு, டெல் ஹால் தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் ஒரு புகைப்படத்தை பகிர்ந்தார். அதில், டெல்லின் வயிறு முற்றிலுமாக குறைந்து உள்ளே சென்றுவிட்டதைக் காண முடிந்தது. இந்த இடுகையைப் பார்த்த பிறகு, அவரது நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் இன்ஸ்டாகிராம் ஃபாலோயர்ஸ் மிகவும் ஆச்சரியப்படுகிறார்கள்.
டெல் ஹால் தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் நீல நிற டி-ஷர்ட்டுடன் எடை இழப்பு பற்றிய தகவல்களைத் தொடர்ந்து கொடுத்து வந்தார். ஆரம்பத்தில் மக்கள் இதை நம்பவில்லை. ஆனால் அவர் இந்த சாதனையைச் செய்து காட்டியபோது, யாராலும் நம்பாமல் இருக்க முடியவில்லை.