5G Smartphone in India: இணையம் மற்றும் தொழில்நுட்பத்தின் தேவைக்கேற்ப ஒவ்வொரு ஆண்டும் ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புக்கு புதிய அம்சங்களைக் கொண்டு வருகின்றன. தற்போது, இந்தியாவில் பெரும்பாலான மக்கள் 4G சேவையை மட்டுமே பயன்படுத்துகின்றனர். ஆனால், 2021 ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து, 5G-ஐ நோக்கி நம் நாடு நகரத் தொடங்கும்.
பல நிறுவனங்கள் தங்களது 5G தொலைபேசி சந்தையை தொடங்க தயாராக உள்ளன. பல நிறுவனங்கள் இந்த ஆண்டில் 5G ஸபோர்ட் உள்ள பல தொலைபேசிகளை அறிமுகப்படுத்தியுள்ளன. 2021 இல் அறிமுகப்படுத்தப்படவுள்ள ஸ்மார்ட்போன்களின் விவரங்கள் பற்றி பார்க்கலாம்.
Xiaomi-யின் இந்த 5G ஸ்மார்ட்போன்களில் குவாட் ரியர் கேமரா அமைப்பு உள்ளது. இந்த தொலைபேசியில் 4520 எம்ஏஎச் பேட்டரியின் 22.5W வேகமான சார்ஜிங் உள்ளது. கேமராவைப் பற்றி பேசுகையில், ரெட்மி 10X-ல் டிரிபிள் கேமரா அமைப்பு 48 மெகாபிக்சல் பிரதான கேமராவுடன் பின்புறத்தில் உள்ளது. இது 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் ஆங்கிள் கேமரா மற்றும் 5 மெகாபிக்சல் மேக்ரோ கேமரா கொண்டுள்ளது. செல்பி மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு முன்பக்கத்தில் 16 மெகாபிக்சல் கேமரா உள்ளது. இந்திய சந்தையில் இந்த தொலைபேசியின் விலை சுமார் 22 ஆயிரம் ரூபாய் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தென் கொரிய ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர் Samsung Galaxy A52 5G-யை விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய தயாராகி வருகிறது. அண்ட்ராய்டு 11 உடன் தொலைபேசியை அறிமுகம் செய்வதாக கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில், Infinity-O Display கிடைக்கும். மேலும், இது சென்டர் அலையட் பஞ்ச்-ஹோல் கேமரா வடிவமைப்பைப் பெறும். தொலைபேசி AMOLED டிஸ்ப்ளே பேனலுடன் தொடங்கப்படும். இந்த தொலைபேசியில் 6.5 இன்ச் முழு எச்டி + டிஸ்ப்ளே கொண்ட 4000 எம்ஏஎச் பேட்டரி கிடைக்கும். அதே நேரத்தில், பின்புறத்தில் 48 எம்.பி முதன்மை கேமராவுடன் குவாட் கேமரா அமைப்பு இருக்கும். இந்தியாவில், இந்த தொலைபேசியை நிறுவனம் ரூ .25,000 விலையில் அறிமுகப்படுத்தக்கூடும்.
ரியல்மீயின் இந்த தொலைபேசி 6.5 அங்குல டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இதன் ரெசல்யூஷன் 1080x2400 பிக்சல்கள். இது தவிர, ஸ்மார்ட்போனில் Octacore (Dual 2GHz கார்ட்ராக்ட்-A76 + ஹெக்ஸா 2 GHz கார்டெக்ட்-A55 CPUs), இதனுடன் Mali-G57 MC3 GPPU, 6/8 GB LPDDR4x RAM கொடுக்கப்பட்டுள்ளது. Default memory capacity 128GB ஸ்டோரேஜ் வரை உள்ளது. இதை 256GB வரை அதிகரிக்கலாம். தொலைபேசியில் 5000mAh பேட்டரி உள்ளது. இந்த தொலைபேசியின் விலை 16,105 ரூபாய் ஆகும்.
Xiaomi-யின் Note தொடர் இந்தியாவில் மிகவும் பிரபலமாகிவிட்டது. இதைக் கருத்தில் கொண்டு, நிறுவனம் விரைவில் தனது அடுத்த மாறுபாடு ரெட்மி நோட் 10 ஐ அறிமுகப்படுத்த உள்ளது. தகவல்களின்படி, இந்த ஸ்மார்ட்போன் Redmi Note 10 Pro Max, Redmi Note 10 Pro, Redmi Note 10 ஆகிய மூன்று மாடல்களில் அறிமுகமாகக் கூடும். முதல் இரண்டு மாடல்கள் 5G நெட்வொர்க்குடன் அறிமுகப்படுத்தப்படும். மூன்றாவது மாடல் 4G நெட்வொர்க் ஆதரவுடன் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தொலைபேசியில் 108MP குவாட் கேமரா அமைப்பு 6.67 இன்ச் முழு எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்ப்ளே கொண்டிருக்கும். ஸ்னாப்டிராகன் 750G உடன் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த தொலைபேசியின் விலை 20 ஆயிரத்திலிருந்து தொடங்கும்
ரியல்மீ X7 மீடியாடெக் டைமன்சிட்டி 1000+ செயலியுடன் அறிமுகப்படுத்தப்படும். இந்த தொலைபேசியில் புகைப்படம் எடுப்பதற்காக 64 எம்.பி முதன்மை கேமராவுடன் குவாட் கேமரா அமைப்பு இருக்கும். 32MP கேமரா முன்பக்கம் செல்பிக்கு கிடைக்கும். தொலைபேசியில் 4500mAh வலுவான பேட்டரி இருக்கும். இது தவிர, 65W சார்ஜிங் இதன் முக்கிய அம்சமாகும். டிஸ்ப்ளே பற்றி பேசுகையில், பயனர்களுக்கு இந்த ஃபோனில் 6.55 இஞ்ச் full HD+ AMOLED டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. இந்த தொலைபேசியில் 9-core Mali-G77 கிராபிக்ஸ் செயலியுடன் ஆக்டா கோர் Dimensity 1000+ ப்ராசசரும் உள்ளது.