மணம் வீசும் மலர்கள் துக்கத்தைப் போக்கி வீட்டிற்கு அதிர்ஷ்டத்தை கொண்டு வரும்

வீட்டில் வளரும் தாவரங்கள் புத்துணர்வையும் நேர்மறை உணர்வையும் தருகின்றன.  வண்ணமயமான மணக்கும் பூக்களைப் பார்த்தால் மகிழ்ச்சியாக இருக்கும். பூச்செடிகள் கண்ணுக்கு மட்டுமல்ல, மணம் பரப்பி மனதிற்கு மகிழ்ச்சியையும் தருகின்றன.

விஞ்ஞானத்தின்படி, மலர்கள் மன அழுத்தத்தை நீக்குகின்றன, வாஸ்துவின்படி, வீட்டில் மகிழ்ச்சியையும் செழிப்பையும் மலர்களில் சில மங்களகரமானதாகக் கருதப்படுகிறது. மிகவும் மங்களகரமான மலர்களைப் பற்றி தெரிந்துக் கொள்ளுங்கள்.

1 /5

பாரிஜாத மலர்கள் மிகவும் மங்களகரமான ஒன்றாக கருதப்படுகிறது. மகிழ்ச்சியையும் அமைதியையும் தரும் இந்தப் பூக்கள் இரவில் மட்டுமே பூக்கும். 

2 /5

சம்பங்கி பூக்கள் தெய்வங்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளன. சுற்றுப்புறத்தை ரம்மியமாக்கி புத்துணர்ச்சியை ஊட்டுகிறது. இந்த செடியை வீட்டில் வளர்ப்பது ஆக்கப்பூர்வமான எண்ணங்களை விதைக்கும்.  

3 /5

குண்டு மல்லி பூக்களின் அழகு மிகவும் அற்புதமானது,மனதை ம்யக்கும் குணத்துடன் மன அழுத்தத்தை போக்குகிறது.

4 /5

வீட்டில் மல்லிகை செடியை வளர்ப்பதால் பல நன்மைகள் உள்ளன. நேர்மறையை ஆற்றலை வழங்கும். மல்லிகை செடியை வீட்டில் பூக்க ஆரம்பித்தவுடனே அதன் தாக்கம் வீட்டில் தென்படும்.  

5 /5

பெரும்பாலான வீடுகளில் ரோஜா மலர்கள் வளர்க்கப்படுகின்றன. ரோஜாவின் அழகு அனைவரையும் கவர்கிறது. சிறப்பு சந்தர்ப்பங்களில் இளஞ்சிவப்பு பூக்கள் வழங்கப்படுகின்றன. காதலை வெளிப்படுத்துவதில் ராஜா ரோஜாப்பூ தான்.