Pongal 2024 Rangoli: வீட்டில் ரங்கோலி கோலம் ஏன் போட வேண்டும் என்று தெரியுமா?

Pongal 2024 Rangoli: விசேஷ நாட்களில் வீட்டில் ரங்கோலி கோலம் போடுவது வழக்கம்.  இது வீட்டிற்கு மகிழ்ச்சியையும், செழிப்பையும் கொண்டு வருகிறது.

 

1 /5

பொங்கல் தமிழ்நாட்டில் முக்கியமாக கொண்டாடப்படும் பாரம்பரிய அறுவடைத் திருவிழா ஆகும். இந்த ஆண்டு பொங்கல் 2024 பண்டிகை ஜனவரி 15 முதல் 18 வரை கொண்டாடப்படுகிறது.  விவசாயிகள் தங்களின் விவசாய கருவிகள், கால்நடைகளை வைத்து வணங்குகின்றனர்.    

2 /5

ரங்கோலியில் பயன்படுத்தப்படும் வண்ணங்கள் வீட்டிற்கு நேர்மறை மற்றும் செழிப்பைக் கொண்டுவருவதாக நம்பப்படுகிறது. பொங்கல் பண்டிகையின் போது வீட்டில் ரங்கோலி கோலம் போடுவது மகிழ்ச்சி உணர்வை தரும்.  

3 /5

அரிசி மாவைப் பயன்படுத்தி ரங்கோலி கோலம் போடப்படுகிறது.  ரங்கோலி என்பது ஒரு அழகான கலை வடிவமாகும். இதில் வண்ண பொடிகள், அரிசி, பூ மற்றும் பிற இயற்கை பொருட்களை பயன்படுத்தப்படுகிறது.  

4 /5

பொங்கல் அன்று ரங்கோலி கோலம் பாரம்பரியம் சிறப்பு வாய்ந்தது. பெண்கள் அதிகாலையில் எழுந்து தங்கள் வீட்டின் நுழைவாயில்களை அழகான ரங்கோலி டிசைன்களால் அலங்கரிப்பார்கள். இதில் பெரும்பாலும் கரும்பு, பூக்கள் மற்றும் பாரம்பரிய உருவங்கள் இடம் பெறுகின்றன.  

5 /5

ரங்கோலி என்பது வெறும் கோலம் மட்டும் அல்ல, விருந்தினர்களை வரவேற்பதற்கும் வீட்டிற்குள் நேர்மறை ஆற்றலைத் தூண்டுவதற்கும் இது ஒரு நல்ல வழியாகக் கருதப்படுகிறது. ரங்கோலியின் துடிப்பான வண்ணங்கள் மகிழ்ச்சியான சூழ்நிலையை சேர்க்கிறது.