லட்சுமியின் அருளைப் பெற சிவனுக்கு அபிஷேகம் செய்யாலாம்! இது பெளர்ணமி சிவ வழிபாடு!

Krodhi Aani Month Pournami Pooja : 16 வகையான பேறுகளையும் கொடுக்கும் பெளர்ணமி வழிபாடு. அதிலும் கோடைக்காலத்தின் தாக்கம் குறைந்திருக்கும் இந்த ஆனி மாதத்தில் சிவனை வழிபட்டால் லட்சுமி அன்னையின் பூரணாருள் கிடைக்கும்... 

வீட்டில் சுபிட்சம் நிலவவும் பல்வேறு பிரச்சனைகளும் நீங்கி வளமுடன் வாழவும் முழு நிலவு நாளன்று செய்யும் பூஜைகள் என்ன? அவற்றால் கிடைக்கும் ந்ன்மைகள் என்ன என்பதைத் தெரிந்துக் கொள்ளலாம்...

1 /8

பௌர்ணமி என்பது வானில் நிலவு முழுதாக தோன்றும் நாள் என்பது தான் பொதுவாக அனைவருக்கும் தெரிந்தது என்றாலும், முழு நிலவு நாளான பவுர்ணமி தொடர்பான விவரங்களும், அன்று செய்யும் பூஜைகள் பற்றியும் தெரிந்துக் கொள்வோம்...  

2 /8

மாதந்தோறும் வரும் பெளர்ணமி ஒன்றுபோல தோன்றினாலும், முழு நிலவு நாளான பவுர்ணமியில் சுமார் 108 வகைகள் உள்ளன. அதற்கு ஏற்ப விரத வழிபாட்டு முறைகள் மாறுபடும் என்பது புராணங்களில் காணப்படும் விஷயம் ஆகும்  

3 /8

பௌர்ணமி நாளானது பகலில் தொடங்கி இரவில் முடிவது, பாதி பகல்- பாதி இரவாக இருக்கும் பெளர்ணமி நாள், இரவில் தொடங்கி பகலில் முடியும் பௌர்ணமி என பல்வேறு வகையான பவுர்ணமிகள் உள்ளன  

4 /8

தடைப்பட்ட சுபகாரியங்கள் தடைகள் நீங்கி வீட்டில் சுபகாரியஙக்ள் நடைபெற பெளர்ணமி விரதம் கடைபிடிக்க வேண்டும்

5 /8

மூலம் நட்சத்திரத்தன்று ஆனி மாத பௌர்ணமி அனுசரிக்கப்படுகிறது. ஆனி பெளர்ணமி திருவையாற்றில் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும்.  திருவையாறில் கொண்டாடப்படும் ஆனி மூலம் மிகவும் சிறப்பு வாய்ந்தது ஆகும்

6 /8

சர்வம் சிவமயம் என்று கூறும் சைவ மதத்தில் சிவனுக்கு அபிஷேகம் செய்வது மிகவும் சிறப்பு வாய்ந்தது. அதிலும் ஆனி மாதம் செய்யப்படும் சிவ அபிஷேகமானது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஆனி அபிஷேகத்தினால் மனம் குளிரும் சிவ பெருமான் எல்லாவித நன்மைகளையும் கொடுப்பார்

7 /8

அபிஷேகங்களில் சிறப்பானது எது என்று கேட்டால் பாலாபிஷேகம் என்று சொல்வார்கள். பாலாபிஷேகம் சிவனுக்கு பிடித்தமானது என்றாலும், தேனாபிஷேகம், விபூதி அபிஷேகம், பஞ்சாமிருத அபிஷேகம் என பல்வேறு வகையான அபிஷேகங்களும் சிவனை ப்ரிதி செய்பவை ஆகும்

8 /8

சிவனின் மனம் குளிரச் செய்யும் அபிஷேகத்திற்கு அன்னை லட்சுமியையும் மனம் மகிழச் செய்யும். சிவ அபிஷேகம் செய்வது, வீட்டில் நிம்மதியையும் பண வரத்தையும் அதிகரிக்கும்