10 வருடங்களுக்கு பிறகு தமிழ் படத்தில் பிரியாமணி!

ப்ரியாமணி நடிப்பில் தமிழ் மற்றும் கன்னடம் ஆகிய இரண்டு மொழிகளில் உருவாகியுள்ள டிஆர்56 படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

 

1 /5

பருத்திவீரன் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் நடிகை ப்ரியாமணி.  தற்போது இவர் சில நிகழ்ச்சிகளில் நடுவராகவும் இருந்து வருகிறார், கிட்டத்தட்ட பத்து வருடங்களாக இவர் தமிழ் படங்கள் எதிலும் நடிக்கவில்லை.   

2 /5

இறுதியாக தமிழில் சாருலதா என்கிற ஹாரர் படத்தில் நடித்தவர் தற்போது மற்றொரு மாஸான படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ரீ-என்ட்ரி ஆகியுள்ளார்.  இவர் தற்போது தமிழ் மற்றும் கன்னடம் ஆகிய இரண்டு மொழிகளில் உருவாகியுள்ள 'டிஆர் 56' என்கிற படத்தில் நடித்துள்ளார்.    

3 /5

இந்த படத்தை ராஜேஷ் அனந்தலீலா இயக்கியுள்ளார்.  அறிவியல் மற்றும் சஸ்பென்ஸ் த்ரில்லர் கதையம்சத்துடன் உருவாகியுள்ள இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. உயிர் பிழைக்க ஒவ்வொரு 56 நிமிடங்களுக்கும் ஒரு அரிய மாத்திரையை எடுத்துக் கொள்ள வேண்டிய ஒரு வித்தியாசமான கொலையாளியை ஒரு சிபிஐ எவ்வாறு கண்டறிகிறார், என்னென்ன இன்னல்களை சந்திக்கிறார் என்பதை திகிலுடன் இந்த 'டிஆர்56' படம் கூறுகிறது.    

4 /5

இந்த படத்தில் ப்ரியாமணி சிபிஐ அதிகாரியாக நடித்துள்ளார்.  இந்த படத்தின் தயாரிப்பாளர் பிரவீன் ரெட்டி தான் படத்திற்கு கதை மற்றும் திரைக்கதையையும் எழுதியுள்ளார்.   

5 /5

இறுதியாக நடிகை ப்ரியாமணி விரட பர்வம் என்கிற படத்தில் நடித்திருந்தார், தற்போது இவரது கைவசம் சயனைட், கோட்டேஷன் கேங், கைமாரா, மைதான், ஜவான் போன்ற படங்கள் உள்ளது மற்றும் இவர் வெங்கட் பிரபு இயக்கத்தில் என்சி 22 படத்திலும் நடிக்கவுள்ளார்.

You May Like

Sponsored by Taboola