Today Horoscope | இன்று புரட்டாசி அமாவாசை.. எந்த ராசிக்கு அதிர்ஷ்டம்? எந்த ராசிக்கு கஷ்டம்?

Purattasi Amavasai 2024 Raasipalan Prediction: இன்றைய நாள் உங்கள்ளுக்கு எப்படி அமையப்போகிறது. இன்றைய 12 ராசிக்கான நற்பலன்கள் என்ன என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள்.

Today Horoscope In Tamil: இன்று (புரட்டாசி மாதம், 16 ஆம் தேதி, புதன்கிழமை) நல்ல நேரம் காலை 9:15 முதல் 10:15 வரை, மாலை 4:45 முதல் 5:45 மணி வரை. சூரிய உதயம் 6 மணி இரண்டு நிமிடம். சூரிய லக்னம் கன்னி. திருவோணம் அவிட்டம் நட்சத்திரக்காரர்களுக்கு இன்றைய தினம் சந்திராஷ்டமம்.

1 /13

இந்தக் கட்டுரையில் இடம் பெற்றுள்ள தகவல்கள் பொதுவானவை. பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், நம்பிக்கைகளின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரைக்கு ஜீ நியூஸ் பொறுப்பேற்காது.

2 /13

இன்றைய நாள் உங்களுடைய ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ளக்கூடிய ஒரு வாய்ப்பு கிடைக்கக்கூடியதாக இருக்கிறது. உங்களுடைய வாழ்க்கையில் நேர்மறை மாற்றங்கள் காணப்படும். உங்களுடைய செயல் திறன் மேம்படும். பணியில் நல்ல அங்கீகாரம் கிடைக்கும். உங்கள் குடும்ப நலனுக்காக பணம் செலவு செய்வீர்கள். வீட்டில் அமைதியும் நல்லிணக்கமும் காணப்படும். நிதிநிலைமை வளர்ச்சிகரமாக இருக்கும். இன்று சிறந்த ஆரோக்கியத்தின் காரணமாக மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.

3 /13

இன்று உங்களுடைய செயல்களை பொறுமையுடன் கவனமாக கையாள வேண்டும். பிரார்த்தனை மற்றும் மந்திரங்கள் மூலம் நன்மை விளைவதை காண்பிக்கக்கூடிய நாள். இன்று பணியிடத்தில் உற்சாகமான நிலை காணப்படாது. பணிகள் கடுமையாக இருக்கும். இது உங்களுக்கு கவலை ஏற்படுத்தும். குடும்பத்தில் மோதல்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. கவனமுடன் செயல்ப்ட வேண்டும். உறவு முறையில அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. நிதி வளர்ச்சி குறைந்து காணக்கூடிய நாள். அதிகரிக்கும் செலவுகள் உங்களுக்கு கவலை அளிக்கும் வகையில இருக்கும். இன்று உங்களிடம் பதட்டம் காணப்படும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தினால் இன்றைய நாள் உங்களுக்கு சிறப்பான நாளாக இருக்கும். 

4 /13

இன்று சாதகமான பலன்கள் கிடைக்கக்கூடிய நாள். பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு புத்துணர்வு பெறுவீர்கள். இதன் மூலம் உங்கள் தொடர்புகள் அதிகரிக்கக் கூடியதாக இருக்கும். பணியில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு இருக்கு. சாதகமான பலன்கள் உங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில இருக்கும். நீங்கள் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். நிதிநிலைமை சிறப்பாக இருக்கு. இன்று ஆரோக்கியம் சிறப்பாக இருக்கு, மகிழ்ச்சியும் திருப்தியும் காணக்கூடிய நாள். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தினால் இன்றைய நாள் உங்கள்ளுக்கு மிகவும் சிறப்பான நாளாகவும் பயனுள்ள நாளாகவும் இருக்கும்.

5 /13

இன்று எதிர்பாராத பலன்கள் கிடைக்கக்கூடிய நாள். மனம் திறந்து அந்த வாய்ப்புகளை ஏற்றுக் கொள்ளுங்கள். பணியில் உங்களுக்கு பதட்டம் காணப்படும். விளைவுகள் உங்களுக்கு திருப்தி அளிக்காது. குடும்பத்தில் விவகாதங்கள் ஏற்பட வாய்ப்பு இருக்கு. சிறிது அனுசரித்து போவதன் மூலம் அமைதி ஏற்படும். நிதி ஏற்றத்தாழ்வுகள் உங்களுக்கு கவலையை உண்டாக்கும். பண இழப்புகள் ஏற்படாமல் இருக்கால் பணத்தை கவனமான முறையில் கையாள வேண்டும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தியானம் மேற்கொள்வது நல்லது. ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தினால் இன்றைய நாள் உங்களுக்கு மிகவும் சிறப்பான நாளாகவும் பயனுள்ள நாளாகவும் இருக்கும்.

6 /13

இன்று சில மாறுதல்கள் ஏற்படக்கூடிய நாள். பொறுமையாகவும் கவனமாகவும் இருக்க வேண்டும். உங்களுடைய மனதில் பணி மாற்றம் குறித்த எண்ணங்கள் இருக்கும். பயணங்கள் அவசியமாக காணப்படும். இதனால் பதட்டம் ஏற்படும். அனுசரித்துப் போவதன் மூலம் உறவில் அமைதியும் நல்லிணக்கமும் காணப்படும். நிதிநிலைமை மகிழ்ச்சிகரமாக இருக்காது. இன்று அதிக செலவுகளை நீங்கள் சந்திக்க நேரிடலாம். உடற்பயிற்சி மூலம் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தினால் இன்றைய நாள் உங்களுக்கு மிகவும் சிறப்பான நாளாகவும் பயனுள்ள நாளாகவும் இருக்கும்.

7 /13

இன்று சிறந்த பலன்கள் விளையக்கூடிய நாள். ஆன்மீக ஈடுபாட்டின் மூலம் உங்களுடைய வளர்ச்சியும், உங்கள் வாழ்க்கையில் நன்மையும் விளையும். பணியில் வெற்றி வாய்ப்புகளை பெறுவீர்கள்.  அதுமட்டுமில்லாமல் உங்களுடைய பணிகளை எளிதாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்துல மகிழ்ச்சியும் திருப்தியும் நிலவக்கூடிய நாள். உங்கள் குடும்பத்துடன் வெளியிடங்களுக்கு செல்வீர்கள். நிதி வளர்ச்சி அபாரகரமாக இருக்கும். நிதிநிலைமையில் சிறத்தன்மை காணப்படும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். இதனால் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.

8 /13

இன்றைய நாளில் ஆறுதல் மற்றும் திருப்தி கிடைக்கும். இன்று திட்டமிட்டு செயல்பட வேண்டும். பணி இடைத்தில் சூழல் சரியில்லாததால், திறமையாக கையாள அமைதியாக இருக்க வேண்டும். உங்க துணையிடத்தில் பழகும் பொழுது உணர்ச்சிவசப்படாதீர்கள். இன்று அதிகம் பேசுவதை தவிர்க்க வேண்டும். அதிகம் செலவு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. பண விசியத்தில் கவனம் தேவை. ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தினால் இன்றைய நாள் உங்களுக்கு மிகவும் சிறப்பான நாளாகவும் பயனுள்ள நாளாகவும் இருக்கும்.

9 /13

இன்று உங்களுடைய பொறுப்புகள் அதிகமாக காணக்கூடிய நாள். ஆன்மீக ஈடுபாடு நன்மை அளிக்கும் வகையில் இருக்கும். பணியிடத்தில் சிறப்பான பலன்கள் கிடைக்காது. பணியில் தவறுகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் கவனமாக கையாள வேண்டும். இன்று உங்களுக்கு உற்சாகமான நாளாக இருக்காது. உரையாடலை தொடங்கும் முன் நன்கு யோசிக்க பேச வேண்டும். உங்கள் குடும்பத்தாருக்காக அதிகம் பணம் செலவு செய்வீர்கள். நிதிநிலைமையை பொறுத்தவரை உங்களுடைய பொறுப்புகள் காரணமாக செலவுகள் ஏற்படும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தினால் இன்றைய நாள் உங்களுக்கு மிகவும் சிறப்பான நாளாக இருக்கும்.

10 /13

இன்றைய நாள் உங்களுக்கு ஆன்மீகம் மீது ஈடுபாடு இருக்கும். இன்று முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும். பணிகளை கையாளும் பொழுது கவனக்குறைவு ஏற்படும். சக பணியாளர்களுடன் மோதுவதை தவிர்க்க வேண்டும். உறவைப் பொறுத்த விஷயங்கள் மகிழ்ச்சிகரமாக இருக்காது.  உடன் பிறந்தாருடன் கருத்து வேறுபாடுகள் காணப்படலாம். நிதி வளர்ச்சி மகிழ்ச்சிகரமாக இருக்காது. பெரிய முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தினால் இன்றைய நாள் உங்களுக்கு மிகவும் சிறப்பான நாளாக இருக்கும்.

11 /13

இன்று நீங்கள் அமைதியாக செயல்பட்டு மகிழ்ச்சி அடையக்கூடிய நாள். உங்களுடைய அன்றாட பணிகளை விரைந்து முடிப்பீர்கள். குடும்ப வளர்ச்சிக்காக இன்று உகந்த நாள் அல்ல. அனுசரித்து போவதன் மூலம் உங்களிடம் நல்லிணக்கம் காணப்படும். பண இழப்பிற்கான வாய்ப்பு உள்ளது. குடும்பப் பொறுப்புகள் காரணமாக கூடுதல் செலவுகள் ஏற்படும் வாய்ப்பிருக்கிறது. ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

12 /13

இன்று உற்சாகமான மாறுதல்களை காண்பிக்கக்கூடிய நாள். இனிமையான சூழ்நிலைகளை உருவாக்கிக் கொள்ள இன்றைய நாளை நீங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். கடின உழைப்பிற்கு பலன் கிடைக்கக்கூடிய நாள். உங்களுடைய நம்பிக்கை மற்றும் தரம் உயரக்கூடிய நாளாக சொல்லப்படுது. உறவினர்களின் வருகை உங்களுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில் இருக்கும். பணப்புழக்கம் சிறப்பாக இருக்கு. நிதியின் சிறத்தன்மைக்கு இன்றைய தினத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். இன்று நீங்கள் மகிழ்ச்சியுடன் இருப்பீர்கள். இதனால் உங்களுடைய ஆரோக்கியம் சிறப்பாக நல்ல முறையில் இருக்கும்.

13 /13

இன்று உங்களுடைய இலக்குகளை அடைவதற்கு நீங்கள் மிகுந்த முயற்சி எடுக்க வேண்டும். பணிமாற்றம் மற்றும் இடமாற்றத்திற்கான வாய்ப்பு உள்ளது. தற்போது நீங்கள் வேலை பார்க்கும் இடத்தில் திருப்தி காணப்படாது. உங்கள் துணையிடத்தில் உற்சாகமான நிலை அல்லது மகிழ்ச்சியான நிலை காணப்படாது. நீங்கள் முடிவுகள் எடுப்பதை கடினமாக உணர்வீர்கள். நிதிநிலைமை எதிர்பார்த்த அளவிற்கு காணப்படாது. பண இழப்புகள் ஏற்படாமல் இருக்க பணத்தை கவனமான முறையில் கையாள வேண்டும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.