காபி தூளை உங்கள் முடிக்கு தடவினால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா?

முடிக்கு காபியைப் பயன்படுத்துவதன் மூலம் பல நன்மைகள் கிடைக்கிறது. உதிர்ந்த முடியை சரி செய்வது முதல், பளபளப்பான முடியை பெறுவது வரை பல வகையில் உதவுகிறது.

 

1 /6

காபி தூளுடன் சிறிது தயிர் கலந்து முடியில் தடவி 40-50 நிமிடங்கள் வரை ஊற வைக்கவும். பிறகு சாதாரண தண்ணீரால் கழுவவும். தொடர்ந்து ஒரு மாதம் இப்படி செய்தால் முடி உதிர்தல் இல்லாமல் இருக்கும்.  

2 /6

முடி உதிர்வு நின்று முடி வளர்ச்சி பெற, முட்டையின் வெள்ளைக்கருவில் காபி தூளை கலந்து முடியின் வேரில் படும் படி தடவி 40 முதல் 50 நிமிடங்கள் வரை ஊற வைக்கவும். பிறகு சாதாரண தண்ணீரில் கழுவினால் முடி வளர்ச்சி பெரும்.  

3 /6

பொடுகு தொல்லை அதிகம் இருக்கும் நபர்கள் காபி தூளில் டீ ட்ரீ ஆயிலை கலந்து முடிக்கு தடவவும். அரைமணி நேரம் இதனை முடியில் ஊற வைக்கவும். ஒரு வாரம் இதனை செய்தால் பொடுகு தொல்லை நீங்கும்.  

4 /6

காபி தூளுடன் தேங்காய் எண்ணெய் கலந்து முடியின் வேரில்படும்படி நன்கு தேய்க்கவும். இதனை 1 மணி நேரம் ஊற வைத்த பிறகு நன்கு கழுவவும். இது முடியை ஆரோக்கியமாக மாற்றும்.  

5 /6

முடி நல்ல பொலிவு பெற தேனில் காபி தூளை கலந்து தலைமுடியில் தடவ வேண்டும். 30-40 நிமிடங்கள் வரை நன்கு ஊற வைத்து பின்னர் தண்ணீரில் கழுவவும். நல்ல வித்தியாசத்தை நீங்கள் பார்க்கலாம்.  

6 /6

முடி பளபளப்பாக இருக்க காபி தூளுடன் ரோஸ்மேரி அத்தியாவசிய எண்ணெய் கலந்து வாரத்திற்கு ஒரு முறை உங்கள் தலைமுடிக்கு பயன்படுத்தவும். பிறகு உங்கள் முடியில் ஏற்படும் மாற்றத்தை நீங்கள் உணரலாம்.