ஜிம், டயட் இல்லாமலேயே வேகமா எடை குறையணுமா? அதுக்கும் வழி இருக்கு... இதை சாப்பிடுங்க போதும்

Weight Loss Tips:  உடல் எடையை குறைக்க ஆரோக்கியமான உணவுமுறையும் சரியான வாழ்க்கை முறையும் மிக அவசியமாகும். எடை இழப்புக்கு புரதம் மற்றும் நார்ச்சத்து மிகவும் முக்கியம். புரதச்சத்து நிறைந்த உணவுகள் உடலுக்கு நீண்ட நேரம் முழுமையான உணர்வை அளிக்கும். 

Weight Loss Tips: தொப்பை கொழுப்பையும் (Belly Fat) உடல் எடையையும் குறைக்க (Weight Loss) சிலர் ஜிம் செல்கிறார்கள். சிலர் கடுமையான உணவு கட்டுப்பாடுகளை மேற்கொள்கிறார்கள். எனினும், சில எளிய இயற்கையான வழிகளிலும் உடல் எடையை குறைக்கலாம். ஜிம், டயட் எதுவும் இல்லாமல் உடல் எடையை குறைக்க விரும்பினால், சில உணவுகளை கண்டிப்பாக உட்கொள்ள வேண்டும். அவற்றை பற்றி இங்கே காணலாம். 

1 /8

புரதச்சத்து: உடல் எடையை குறைக்க புரதச்சத்து நிறைந்த உணவை உட்கொள்ளலாம். பால் அல்லது பால் பொருட்கள், சோயா சார்ந்த பொருட்கள், முட்டை மற்றும் பருப்பு வகைகளை உட்கொள்ளலாம். இவை அனைத்தும் அதிக அளவு புரதத்தைக் கொண்டிருக்கின்றன. இது பசியைக் குறைக்க உதவும். 

2 /8

ஓட்ஸ்: காலை உணவில் ஓட்ஸ் சாப்பிடுவது மிகவும் நன்மை பயக்கும். இதில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது. இதன் மூலம் வயிறு நீண்ட நேரத்திற்கு நிரம்பிய உணர்வுடன் இருக்கும். இது நாள் முழுதும் ஏற்படும் பசியைக் குறைக்கவும், உட்கொள்ளும் உணவின் அளவைக் குறைக்கவும் உதவுகிறது. ஒரு கப் ஓட்ஸில் 5 கிராம் நார்ச்சத்து, 6 கிராம் புரதச்சத்து மற்றும் ஏராளமான ஊட்டச்சத்துகளும் உள்ளன. 

3 /8

உலர் பழங்கள்: உலர் பழங்களில் புரதச்சத்து, நார்ச்சத்து மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் ஆகியவை நிறைந்துள்ளன. தினமும் இவற்றை ஒரு கையளவு உட்கொண்டால் உடல் எடையை எளிதாக குறைக்கலாம். இருப்பினும், உலர் பழங்களில் அதிக கலோரிகள் இருப்பதால், அவற்றை சிறிய அளவிலேயே உட்கொள்ள வேண்டும்.   

4 /8

முட்டை: காலை உணவில் முட்டை உட்கொள்வதால், நீண்ட நேரம் உடலுக்கு நிரம்பிய உணர்வு இருக்கும். காலை உணவாக முட்டையை சாப்பிடுபவர்களுக்கு பசி குறைவாக இருப்பதாகவும், அவர்கள் மதிய உணவில் குறைவாக சாப்பிடுவதாகவும் ஆராய்ச்சிகள் கண்டறிந்துள்ளன. முட்டை புரதச்சத்து மற்றும் வைட்டமின் டி போன்ற ஊட்டச்சத்துக்களின் நல்ல மூலமாகவும் உள்ளது. 

5 /8

க்ரீன் டீ: உடல் எடையை குறைக்க க்ரீன் டீ உதவியாக இருக்கும். கிரீன் டீ உடலுக்கு புத்துணர்ச்சி அளித்து வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது. இது உங்கள் உடல் கொழுப்பைக் குறைக்க உதவுகிறது. 

6 /8

பழங்கள் மற்றும் பச்சை காய்கறிகள்: உடல் எடையை குறைக்க பழங்கள் மற்றும் பச்சை காய்கறிகளை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். இந்த இரண்டிலும் அதிக அளவு வைட்டமின்கள், நார்ச்சத்து மற்றும் தாதுக்கள் உள்ளன. இவை உடலுக்கு தேவையான ஊட்டச்சத்தை வழங்குகின்றன. இவை ஆரோக்கியமற்ற உணவிற்கான பசியையும் குறைக்கின்றன. 

7 /8

பருப்பு வகைகள்: பருப்பு வகைகளில் புரதச்சத்து மற்றும் நார்ச்சத்து அதிகமாக உள்ள ராஜ்மா, கொண்டைக்கடலை, கருப்பு பீன்ஸ், மசூர் பருப்பு, போன்றவை மிகவும் ஆரோக்கியமானவையாக கருதப்படுகின்றன. இவை உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகளை வழங்கி உடல் எடையையும் குறைக்க உதவுகின்றன. 

8 /8

பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.