டி20 உலக கோப்பை : பிசிசிஐ தேர்வுக்குழுவை கடுமையாக திட்டிய ரவிசாஸ்திரி

டி20 உலக கோப்பைக்கு இந்திய அணியை தேர்வு செய்த பிசிசிஐ தேர்வுக்குழுவை ரவி சாஸ்திரி கடுமையாக விமர்சித்துள்ளார்.

டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வெஸ்ட் இண்டீஸ், அமெரிக்காவில் நடக்கும் நிலையில், இந்த தொடரில் விளையாட இந்திய அணியை தேர்வு செய்த பிசிசிஐ தேர்வுக்குழுவை ரவிசாஸ்திரி கடுமையாக திட்டியுள்ளார். 

 

1 /7

டி20 உலகக் கோப்பை வருகிற அமெரிக்கா மற்றும் மேற்கு இந்திய தீவுகளில் தொடங்கியுள்ளது. இதற்கான இந்திய அணி அஜித் அகார்க்கர் தலைமையில் இந்திய அணி தேர்வுக் குழுவினர் தேர்வு செய்தனர்.

2 /7

ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி வரும் ஷிவம் துபே, சஞ்சு சாம்சன் ஆகியோர் உலகக் கோப்பை அணியில் இடம்பெற்றுள்ளனர். விபத்தில் சிக்கி நீண்ட காலம் அணியில் இடம்பெறாமல் இருந்த ரிஷப் பந்த்க்கும் அணியில் இடம் கிடைத்துள்ளது. 

3 /7

யுஸ்வேந்திர சஹால் மீண்டும் இந்திய அணிக்கு திரும்பியுள்ளார். இதேபோல் மோசமான ஃபார்ம் காரணமாக விமர்சிக்கப்பட்டு வரும் ஹர்திக் பாண்டியாவுக்கும் அணியில் இடம் அளிக்கப்பட்டுள்ளது.

4 /7

அதேநேரம், ரிசர்வ் வீரர்களாக ஷுப்மன் கில், ரிங்கு சிங், கலீல் அகமது ஆவேஷ் கான் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். தமிழக வீரர்கள் ஒருவர் கூட இந்திய அணியில் இடம்பெறவில்லை. கே.எல்.ராகுலுக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை.

5 /7

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் சுழற்பந்துவீச்சாளர்கள் மட்டும் நான்கு பேர் தேர்வு செய்யப்பட்டிருக்கின்றனர். இது குறித்து ரவிசாஸ்திரி கடுமையாக திட்டியுள்ளார்.  

6 /7

இந்திய அணி தேர்வு குறித்து பேசிய ரவிசாஸ்திரி, டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் இத்தனை சுழற்பந்துவீச்சாளர்கள் தேவையில்லை, ஒருவேளை இப்போது இந்திய அணியை தேர்வு செய்வதாக இருந்தால் நிச்சயம் இன்னொரு வேகப்பந்துவீச்சாளருக்கு வாய்ப்பு கொடுத்திருப்பார்கள்.

7 /7

என்ன மைன்ட் செட்டில் இப்படியொரு இந்திய அணியை தேர்வு செய்தார்கள் என்று தெரியவில்லை என ரவிசாஸ்திரி தெரிவித்துள்ளார்.