ஆசிய கோப்பை வரலாற்றில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரர் என்ற வரலாறு படைத்துள்ளார் ஜடேஜா
ஆசிய கோப்பையில் இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா வரலாறு படைத்தார்.
ஆசிய கோப்பை வரலாற்றில் இந்திய அணிக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற பெருமையை ஜடேஜா பெற்றுள்ளார். முன்னாள் ஆல்ரவுண்டர் இர்பான் பதானின் சாதனையை முறியடித்தார்.
ஆசிய கோப்பை வரலாற்றில் ஜடேஜா இதுவரை 23 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இர்பான் பதான் ஆசியக் கோப்பையில் மொத்தம் 22 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். இந்த சாதனையை தான் ஜடேஜா இப்போது முறியடித்துள்ளார்.
ஆசிய கோப்பை வரலாற்றில் ஜடேஜா தற்போது 23 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்
இலங்கை அணியின் கேப்டன் தசுன் ஷனகாவை வெளியேற்றியபோது, இந்த வரலாற்றை ரவீந்திர ஜடேஜா படைத்தார்.
ஆசியக் கோப்பை வரலாற்றில், இலங்கை ஜாம்பவான் சமிந்த வாஸ் 23 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார்.
இப்போது ஆசிய கோப்பையில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்களின் பட்டியலில் சமிந்தா வாஸூடன் முதல் இடத்தில் இருக்கிறார்.
இறுதிப்போட்டியில் இன்னொரு விக்கெட் வீழ்த்தும்பட்சத்தில் ஆசிய கோப்பை ஒருநாள் போட்டி வரலாற்றில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற சாதனையையும் ஜடேஜா படைப்பார்.
ரவீந்திர ஜடேஜா - 23 விக்கெட்*, சமிந்தா வாஸ் - 23 விக்கெட், இர்பான் பதான் – 22 விக்கெட், குல்தீப் யாதவ் – 17 விக்கெட், சச்சின் டெண்டுல்கர்-17, கபில்தேவ்- 15 விக்கெட்டுகள்