Rishabh Pant: ரிஷப் பந்த் குறித்து முக்கிய அப்டேட் வெளியிட்ட பிசிசிஐ!

Rishabh Pant: ரிஷப் பந்த் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக 2024 ஐபிஎல் போட்டியில் விக்கெட் கீப்பர்-பேட்டராக விளையாட உள்ளார்.

 

1 /5

2022ல் நடந்த மிகப்பெரிய கார் விபத்தால் கடந்த ஒரு வருடமாக கிரிக்கெட் விளையாடாமல் இருந்த ரிஷப் பந்தை விக்கெட் கீப்பர்-பேட்டராக விளையாட பிசிசிஐ அனுமதி அளித்துள்ளது.

2 /5

ரிஷப் பந்த் தற்போது 100 சதவீதம் பிட் ஆகி உள்ளார் என்று பிசிசிஐ அதிகார்வப்பூர்வமாக தெரிவித்துள்ளது. மேலும் விக்கெட் கீப்பராக தொடர்வதற்கும் பிசிசிஐ அனுமதி அளித்துள்ளது.  மார்ச் 23 ஆம் தேதி பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான போட்டியில் பந்த் விளையாட உள்ளார்.

3 /5

2023 ஆம் ஆண்டு காலில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட பந்த் சீரான முன்னேற்றம் அடைந்து வந்தார். பந்த் மீண்டும் கிரிக்கெட் விளையாட முடியாது என்று பலர் கூறினாலும் தற்போது மீண்டு வந்துள்ளார்.

4 /5

முதலில் ஐபிஎல் 2024 போட்டிகளில் பந்த் கேப்டன் மற்றும் பேட்டராக விளையாடுவார் என்று கூறப்பட்ட நிலையில், தற்போது விக்கெட் கீப்பிங்கும் செய்வார் என்று பிசிசிஐ கூறி உள்ளது.  இருப்பினும் இறுதி முடிவை அவரது உடற்தகுதி பொறுத்து டெல்லி அணி முடிவு செய்யும்.

5 /5

பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா கூறுகையில், "பந்த் விக்கெட் கீப்பிங் செய்தால், அவர் உலகக் கோப்பையில் விளையாடுவார்" என்று கூறி இருந்தார்.  ஜூன் 1 ஆம் தேதி தொடங்கும் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி மே முதல் வாரத்தில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.