தவான் vs கே.எல்.ராகுல்; ரோகித் யாருக்கு வாய்ப்பு கொடுப்பார்?

வங்கதேச அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ரோகித்துடன் ஓப்பனிங் இறங்கப்போவது யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது.

 

1 /5

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, ரோஹித் சர்மா மற்றும் ஷிகர் தவான் ODI போட்டிகளில் இந்தியாவின்  தொடக்க ஜோடியாக இருந்தனர். ஆனால் சுப்மான் கில் மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோர் தொடக்க வீர ர்களாக இருப்பதால் யாருக்கு ரோகித் சர்மா முக்கியத்துவம் கொடுக்கப்போகிறார் என்பது தெரியவில்லை.     

2 /5

கேஎல் ராகுல் டாப் ஆர்டரில் பேட் செய்வதை விரும்புகிறார்.  ஆனால் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியின் பதவிக்காலத்தில், அவர் மிடில் ஆர்டரில் சில போட்டிகளில் விளையாடினார்.

3 /5

ஷிகர் தவான் 2022-ல் இந்தியாவுக்காக 19 ODI போட்டிகளில் இன்னிங்ஸைத் தொடங்கியுள்ளார். அதில் அவரது ஸ்ட்ரைக் ரேட் 75.11 ஆகும், இது அவ்வளவு சிறப்பாக இல்லை. 

4 /5

ராகுல் 45 ODI போட்டிகளில் ஐந்து சதங்கள் மற்றும் 10 அரை சதங்களை அடித்துள்ளார், அதில் அவர் 85-க்கு மேல் ஸ்ட்ரைக் ரேட் வைத்துள்ளார்.  ஒருவேளை இதனை கருத்தில் கொண்டு தவானுக்கு ஓய்வு அளிக்க அணி நிர்வாகம் விரும்பினால், ராகுல் கண்டிப்பாக ரோஹித்துடன் டாப் ஆர்டரில் இணைவார்.

5 /5

ஒருநாள் போட்டியில் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் லிஸ்ட் வலுவாக இருப்பதால், வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் தொடர் இந்தியாவுக்கு சாதகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் வாய்ப்பில் யாருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்பது ரோகித் சர்மாவின் கையில் தான் இருக்கிறது.