ஐபிஎல் மெகா ஏலத்தில்... இந்த 3 சீனியர் வீரர்களை யாருமே வாங்க வாய்ப்பில்லை...!

IPL 2025 Mega Auction: ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில் இந்த மூன்று அனுபவ வீரர்களை எந்த அணிகளும் எடுக்க பெரிதாக ஆர்வம் காட்டாது எனலாம். அவர்கள் குறித்து இதில் விரிவாக காணலாம்.

  • Sep 28, 2024, 13:58 PM IST

ஐபிஎல் 2025 மெகா ஏலம் பல இளம் வீரர்களுக்கு புதிய திறப்புகளை ஏற்படுத்தும் என்றால், சில அனுபவ வீரர்களுக்கு கசப்பான தருணங்களை கொடுக்கவும் காத்திருக்கிறது எனலாம். அந்த வகையில், இந்த மெகா ஏலத்தில் இந்த மூன்று வீரர்களை எந்த அணிகளும் எடுக்க அதிக ஆர்வம் காட்டாது எனலாம். இவர்களுக்கு மாற்றாக பல இளம் வீரர்கள் இருப்பதால் அனுபவ வீரர்களுக்கு இடம் கிடைக்க வாய்ப்பு குறைவுதான்.

 
1 /8

ஐபிஎல் 2025 மெகா ஏலம் (IPL 2025 Mega Auction) குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகலாம். அதாவது, எத்தனை வீரர்களை ஒரு அணி தக்கவைக்கலாம் உள்ளிட்ட மெகா ஏலத்தின் விதிகள் அறிவிக்கப்பட உள்ளது.   

2 /8

அந்த வகையில், ஐபிஎல் நிர்வாகக் குழு கூட்டம் (IPL Governing Committee Meeting) இந்த வார இறுதியில் நடைபெறுவதாக கூறப்படுகிறது. அந்த கூட்டத்தில் நிர்வாகிகள் இறுதி முடிவை எடுத்து விரைந்து அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.   

3 /8

பெரும்பாலும் ஒரு அணி 5 வீரர்களை தக்கவைக்க அனுமதி கிடைக்கும் என பேசப்படுகிறது. அதிலும் அதிகபட்சமாக 3 இந்திய வீரர்களையும், வெளிநாட்டு வீரர்களில் அதிகபட்சமாக இரண்டு பேரையும் ஒரு அணி தக்கவைக்க வாய்ப்பளிக்கப்படலாம்.  

4 /8

அந்த சூழலில், ஒவ்வொரு அணியும் இந்த 5 வீரர்களை சுற்றியே தனது ஒட்டுமொத்த அணியையும் கட்டமைக்க திட்டமிடும். எனவே, ஒரு அணி எந்தெந்த வீரர்களை தக்கவைக்கிறதோ அதன்மூலமே அந்த அணி ஏலத்தில் எந்தெந்த வீரர்களை எதிர்பார்க்கிறது என்பதை நாம் கணித்துவிடலாம். 

5 /8

இந்நிலையில், வரும் ஐபிஎல் 2025 (IPL 2025) மெகா ஏலத்தில் இந்த மூன்று அனுபவ வீரர்களுக்கு எந்த அணிகளும் பெரிதாக ஆர்வம் காட்டாது எனலாம். இதனால் இவர்களை ஏலத்தில் யாரும் எடுக்காமல் கூட போக அதிக வாய்ப்பிருக்கிறது. அந்த 3 வீரர்கள் குறித்து இங்கு காணலாம்.   

6 /8

அஜிங்க்யா ரஹானே: ராஜஸ்தான் அணியில் இருந்து விடுவிக்கப்பட்ட பின்னர் சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Super Kings) ரஹானேவை (Ajinkya Rahane) எடுத்து, வித்தியாசமான வாய்ப்பை வழங்கியது. 2023 சீசனில் சிஎஸ்கே கோப்பையை அடிக்க இவரின் பார்மும் கைக்கொடுத்தது. ஆனால் கடந்த 2024 சீசனில் பெரிதாக இவர் சோபிக்கவில்லை. ஓப்பனிங்கில் இறங்கி பவர்பிளேவில் சொதப்பலான ஆட்டத்தை விளையாடினார். இவரை சிஎஸ்கே ஏலத்தில் நிச்சயம் விடுவிக்கும் என்பதால் இவரை எடுக்க அணிகள் ஆர்வம் காட்டாது. சிஎஸ்கே வேண்டுமானால் அடிப்படை தொகையில் மீண்டும் எடுத்துக்கொள்ளலாம்.  

7 /8

விருத்திமான் சாஹா: குஜராத் டைட்டன்ஸ் (Gujarat Titans) விருத்திமான் சாஹா (Wriddhiman Saha) நிச்சயம் விடுவிக்கும். குஜராத் அணி கடந்த சீசனில் பெரியளவில் சொதப்பியதற்கு இவரின் ஆட்டமும் ஒரு காரணம். ஓப்பனிங்கில் நல்ல தொடக்கத்தை இவர் அளிக்கவில்லை. இந்திய விக்கெட் கீப்பர்களுக்கு நல்ல மவுசு இருக்கிறது என்றாலும் இவர் பெரும்பாலும் டி20இல் கவனம் செலுத்தவதில்லை என்பதால் இவரை மற்ற அணிகள் ஏலத்தில் எடுக்க யோசிக்கும்.  

8 /8

கேன் வில்லியம்சன்: உலகத்தரமான கிரிக்கெட் வீரர் என்றாலும் தற்போதைக்கு டி20இல் அதுவும் இந்தியாவில் கேன் வில்லியம்சன் (Kane Williamson) பெரிதாக பிரகாசிக்க மாட்டார் என்பது பொதுவான கருத்து. குஜராத் அணி இவரை ஏலத்திற்கு விடுவித்தாலும் இவருக்கு ஒன்-டவுன் இடம் கொடுக்க எந்த அணிகளும் முயற்சிக்காது எனலாம். எனவே இவரும் ஏலத்தில் எடுக்கப்படாமல் போக அதிக வாய்ப்பிருக்கிறது. அமித் மிஸ்ரா, ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் இவர்களையும் இந்த லிஸ்டில் சேர்க்கலாம் என்றாலும், ரஹானே, சாஹா, வில்லியம்சன் ஆகியோரின் நிலை சற்றே மோசமாக உள்ளது.