கதாநாயகியாகும் விக்ரமின் தெய்வ திருமகள்

தெய்வ திருமகள் படத்தில் குழந்தை நட்சத்திரமாக வந்த சாரா, விரைவில் கதாநாயகியாக நடிக்க உள்ளார்.

 

1 /6

2011-ம் ஆண்டில் வெளியான 'தெய்வ திருமகள்' படத்தில் விக்ரமின் மகளாக 'நிலா' என்ற கதாபாத்திரத்தில் நடித்து கவனம் ஈர்த்தவர் சாரா.   

2 /6

அதனைத்தொடர்ந்து மீண்டும் விஜய் இயக்கத்தில் 'சைவம்' படத்தில் சாரா நடித்தார். 'பொன்னியின் செல்வன்-2' படத்தில் இளவயது நந்தினியாக நடித்து அட்டகாசப்படுத்தி இருந்தார்.

3 /6

சமீபகாலமாகவே இணையதளத்திலும் சாரா தனது கவர்ச்சி படங்களை வெளியிட்டு வந்தார். இதனால் அவர் கதாநாயகியாக நடிக்க போகிறார் என்று எதிர்பார்க்கப்பட்டது.   

4 /6

அதன்படி, தமிழ் சினிமாவில் சாரா கதாநாயகியாக நடிக்க போகிறார். 'தெய்வ திருமகள்' படத்தின் மூலம் அவரை குழந்தை நட்சத்திரமாக அறிமுகப்படுத்திய விஜய் தான் கதாநாயகியாகவும் அறிமுகப்படுத்த இருக்கிறார்.   

5 /6

இதுகுறித்து விஜய் கூறுகையில், 'பொன்னியின் செல்வன்-2' படத்தில் மணிரத்னம் சாராவை தெய்வீக அழகுடன் சித்தரித்துவிட்டார்.   

6 /6

இனி சாரா தைரியமாக ஹீரோயினாக நடிக்கலாம். அவரை நான் 2025-ம் ஆண்டு தமிழில் கதாநாயகியாக அறிமுகப்படுத்த இருக்கிறேன் என்றார். விஜய் தற்போது அருண் விஜய் நடிப்பில் 'மிஷன்: சேப்டர்-1' என்ற படத்தை இயக்கி வருகிறார்.