சசிகலாவின் பயணம், சிறையில் இருந்து சிம்மாசனத்திற்கு இட்டுச் செல்லுமா?

சென்னைக்கு திரும்பும்போது செய்தியாளர்களை சந்தித்த சசிகலா, தான் யாருக்கும் அடிபணியமாட்டேன், பொறுத்திருந்து பாருங்கள் என்ற வார்த்தைகளை பயன்படுத்தினார். இது அவரது நோக்கத்தை வெளிப்படுத்துவதாக நம்பப்படுகிறது.

சொத்து குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகால பெங்களூரு சிறைவாசத்துக்கு பின் தமிழகம் திரும்பியிருக்கும் சசிகலா, செய்தியாளர்களை முதல் முறையாக சந்தித்த போதே, அவர் அளித்துள்ள பதில்களை வைத்து பார்க்கும் போது, தமிழக அரசியலில் பரபரப்புக்கு குறைவிருக்காது

Also Read | ராமவரம் தோட்டத்தில் MGR சிலைக்கு மாலை அணிவித்து அதிரடியாக களம் இறங்கும் சசிகலா

1 /11

ராமவரம் தோட்டத்தில் MGR சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் சசிகலா

2 /11

ராமாவரம் தோட்டத்திற்கு வந்த சசிகலாவுக்கு ஆப்பிள், சாத்துக்குடி, பைன்ஆப்பிள் ஆகியவற்றால் செய்யப்பட்ட பழ மாலை அணிவிக்கப்பட்டது. பழ மாலை மிகவும் எடை அதிகமுள்ளதாக இருந்தது. எவ்வளவு எடை என்பதை இந்த புகைப்படம் சொல்லும்

3 /11

முன்னாள் முதலமைச்சர் ஜானகி அம்மையாரின் நினைவிடத்திலும் சசிகலா மலர்த்தூவி மரியாதை செலுத்தினார்.

4 /11

ஜெயலலிதாவின் அரசியல் பாதைக்கு அஸ்திவாரம் இட்ட இடம் ராமாவரம் தோட்டம். இங்கிருந்து தனது அரசியல் பயணத்திற்கு அச்சாணியிடுகிறார் சிறையில் இருந்து வெளியே வந்த சசிகலா

5 /11

அஇஅதிமுக கட்சியை உருவாக்கியவருமான எம்.ஜி.ராமசந்திரன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் சசிகலா.

6 /11

கொரோனாவுக்கு சிகிச்சைப் பெற்ற சசிகலா, கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்கிறார். முகத்தில் மாஸ்குடன் சசிகலா

7 /11

சசிகலாவுக்கு நெருக்கமானவர் ஜெயலல்லிதா என்றாலும், அவருக்கு எம்.ஜி.ஆர் அறிமுகமும் உண்டு

8 /11

சிறையில் இருந்து சென்னை திரும்பும் வழியில் ஆலய வழிபாடு செய்யும் சசிகலா

9 /11

சசிகலா பயணித்த பாதை நெடுகிலும் மக்கள் கூட்டம்

10 /11

சசிகலா சென்னை ரிடர்ன்ஸ்

11 /11

சசிகலாவை வரவேற்க விதவிதமாக ஒட்டப்பட்டிருக்கும் போஸ்டர்கள்.