ராமவரம் தோட்டத்தில் MGR சிலைக்கு மாலை அணிவித்து அதிரடியாக களம் இறங்கும் சசிகலா

சசிகலாவின் அரசியல் காய் நகர்த்தல்கள் தொடங்கிவிட்டன. இன்று அதிகாலையிலேயே சென்னை ராமாவரம் எம்ஜிஆர் தோட்டத்திற்க்கு சென்றார் சசிகலா. அங்கு மறைந்த் முன்னாள் முதலமைச்சரும், அஇஅதிமுக கட்சியை உருவாக்கியவருமான எம்.ஜி.ராமசந்திரன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் சசிகலா.

Written by - Malathi Tamilselvan | Last Updated : Feb 9, 2021, 10:05 AM IST
  • அதிகாலையிலேயே ராமவரம் தோட்டத்திற்கு சென்றார் சசிகலா
  • ஜெயலலிதாவின் அரசியல் குரு எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்தார்
  • பிரம்மாண்ட பழ மாலை அணிவித்து வரவேற்பு
ராமவரம் தோட்டத்தில் MGR சிலைக்கு மாலை அணிவித்து அதிரடியாக களம் இறங்கும் சசிகலா title=

சென்னை: சசிகலாவின் அரசியல் காய் நகர்த்தல்கள் தொடங்கிவிட்டன. இன்று அதிகாலையிலேயே சென்னை ராமாவரம் எம்ஜிஆர் தோட்டத்திற்க்கு சென்றார் சசிகலா. அங்கு மறைந்த் முன்னாள் முதலமைச்சரும், அஇஅதிமுக கட்சியை உருவாக்கியவருமான எம்.ஜி.ராமசந்திரன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் சசிகலா.

சசிகலா விடுதலைக்கு முந்தைய சில நாட்களில் சென்னை மெரீனா கடற்கரையில் நினைவிடம் திறந்துவைக்கப்பட்டது. ஆனால் பராமரிப்பு பணிகளுக்காக அது மூடப்பட்டது. அதேபோல், ஜெயலலிதா தனது இறுதிகாலம் வரை வாழ்ந்த வேதா நிலையம் வீடு தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் இருந்தாலும், நினைவில்லம் தொடங்கிவைக்கப்பட்டது.
வேதா இல்லமும் திறந்து வைக்கப்பட்டவுடனே, பொதுமக்களின் பார்வைக்கு தற்போது திறக்கப்படாது என்று கூறப்பட்டது. காரணம் நீதிமன்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதுதான். 

இந்தநிலையில், சசிகலா அங்கெல்லாம் செல்லக்கூடாது என்பதற்காகத் தான் இப்படி செய்யப்படுகிறது என்ற குற்றச்சாட்டுகளும் எழுந்தன. அதுமட்டுமல்ல, பணிகள் முடிவடையாத நிலையில் அல்லது நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும்பொதே ஏன் நினைவிடங்கள் தொடங்கப்பட வேண்டும், அனைத்து முட்டுக்கட்டைகளும் முடிந்த பின் திறந்து வைக்கப்பட்டிருக்கலாமே என்ர கேள்விகளும் எழுகின்றன.

Also Read | சசிகலா வருகையால் சூடு பிடிக்கும் அரசியல் களம்... மிரட்டல் விடுக்கும் சசிகலா..!!

இந்த நிலையில், அதிமுகவுக்கு சசிகலா உரிமை கோரிவிடக்கூடாது என்பதற்கான முன்னேற்பாடுகளாக நினைத்து ஆளும் கட்சியினர் செய்யும் அடாவடிகள் இவை என்று டிடிவி தினகரன் குற்றம் சாட்டுகிறார்.

இந்த நிலையில் சொத்துக் குவிப்பு வழக்குகளுக்காக சிறை சென்ற சசிகலா 4 ஆண்டுகள் கழித்து தமிழகத்திற்கு நேற்று வந்தார். அவருக்கு வழிநெடுகிலும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இன்று அதிகாலை 4 மணிக்கு ராமாவரம் தோட்டத்திற்கு வந்த சசிகலாவுக்கு ஆப்பிள், சாத்துக்குடி, பைன்ஆப்பிள் ஆகியவற்றால் செய்யப்பட்ட பழ மாலை அணிவிக்கப்பட்டது. ராமாவரத்தில் எம்ஜிஆர் நினைவிடம், ஜானகி அம்மையாரின் நினைவிடத்திலும் சசிகலா மலர்த்தூவி மரியாதை செலுத்தினார்.

பின்னர் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய சசிகலா, அவரது வாரிசுகளிடம் நலம் விசாரித்தார்.   

Also Read |  ஜெயலலிதாவின் மீட்டெடுக்க வந்த அம்மாவா சசிகலா சின்னம்மா? 

முன்னதாக நேற்று அதிகாலை பெங்களூருவில் இருந்து சென்னைக்கு புறப்பட்ட சசிகலா பயணித்த பாதைகளில் பிரமாண்ட வரவேற்பு கொடுக்கப்பட்டது. வாணியம்பாடி டோல்கேட்டில் செய்தியாளர்களை சந்தித்தார் சசிகலா. நான்காண்டு கால சிறைதண்டனைக்கு பிறகு டோல்கேட்டை பிரஸ் மீட்டிங் பாயிண்டாக மாற்றிவிட்டார் சசிகலா.

எம்.ஜி.ஆர் உருவாக்கி, ஜெயலலிதா வளர்த்தெடுத்த அஇஅதிமுகவுக்கு உரிமை கோரி உரிமைக்குரல் எழுப்புவதில் குறியாக இருக்கிறார் சசிகலா என்பதை நிரூபித்துவிட்டது இந்த டோல்கேட் மீட். பல முறை சோதனைகளை சந்தித்திருக்கும் கட்சி, பீனிக்ஸ் பறவை போல மீண்டு வந்திருக்கிறது என்று சொன்னார் சசிகலா.

புரட்சித் தலைவி வழி வந்த ஒரு தாய் பிள்ளைகள் ஒற்றுமையோடு இணைந்து செயல்படுவதே தனது விருப்பம் என கோடிட்டுக் காட்டினார். தொண்டர்களுக்கும், தமிழக மக்களுக்கும் தான் நான் அடிமை; அடக்குமுறைக்கு நான் என்றும் அடிபணியமாட்டேன் என்று சொல்லி பரபரப்பைக் கூட்டினார் சசிகலா.

Also Read | சுதாகரன், இளவரசிக்கு சொந்தமான 6 சொத்துக்களை அரசு பறிமுதல் செய்ததன் பின்னணி  

அஇஅதிமுக தலைமை அலுவலகத்துக்கு செல்வீர்களா? என்று கேட்கப்பட்டதற்கு பொறுத்திருந்து பாருங்கள் என்று சொன்ன சசிகலா, ஜெயலலிதா நினைவிடம் மூடப்பட்டது குறித்த கேள்விக்கு எதற்காக இதை செய்தார்கள்? என்பது தமிழக மக்களுக்கு நன்றாகவே தெரியும் என்று பதிலளித்தார். தொடர்ந்து தீவிர அரசியலில் ஈடுபடப்போவதாக சொல்வதற்கான வாய்ப்பாகவும் இந்த டோல்கேட் மீட்டிங்கை பயன்படுத்திக் கொண்டார் சசிகலா.

சசிகலா வரும் வழி நெடுக பட்டாசு வெடித்து கொண்டாட்டங்கள் நடத்தப்பட்டன. அதேபோல், சசிகலாவின் வார்த்தைகள் அனைத்தும் தமிழக அரசியலில் பட்டாசாய் வெடித்து பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 
 
எம்ஜிஆர், ஜெயல‌லிதா வழியில் அதிமுகவின் பொது எதிரிகள், ஆட்சியில் அமராமல் தடுக்க ஒரே அணியாக ஒற்றுமையாக செயல்படுவோம் என்று சொன்னது ஆளும் கட்சியினருக்கு கலவரத்தை ஏற்படுத்தியதா என்பது எதிர்வரும் நாட்களில் தெரிந்துவிடும்.

Also Read | Victoria மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன சசிகலா ஏன் சென்னைக்கு வரவில்லை?

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News