SBI வாடிக்கையாளர்களுக்கு நல்ல செய்தி: ஒரே கால் செய்து ஏகப்பட்ட சேவைகளை பெறலாம்

எஸ்பிஐ தொடர்பு மையம்: பாரத ஸ்டேட் வங்கியின் வாடிக்கையாளர்களுக்கு ஒரு நல்ல செய்தி. ஒரே டயலில் வீட்டில் இருந்தபடியே வங்கி தொடர்பான பல சேவைகளை இப்போது பெறலாம். இதற்கு நீங்கள் எஸ்பிஐ-யின் தொடர்பு மையத்தை அழைக்க வேண்டும். எஸ்பிஐ 1800 1234 மற்றும் 1800 2100 ஆகிய இரண்டு புதிய தொடர்பு எண்களைப் பகிர்ந்துள்ளது. இந்த வசதி வங்கியின் வாடிக்கையாளர்களுக்கு 24 மணி நேரமும் கிடைக்கும். இதன் மூலம் பல்வேறு பிரச்சனைகளுக்கு வங்கியில் இருந்து உதவி கிடைக்கும். இதற்காக வாடிக்கையாளர்களிடம் இருந்து எஸ்பிஐ எந்த கட்டணத்தையும் வசூலிப்பதில்லை.

 

1 /5

எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் ஒரே ஒரு அழைப்பின் மூலம் தங்கள் கணக்கு இருப்பை சரிபார்க்க முடியும். இதனுடன், அவர்களின் கடைசி ஐந்து பரிவர்த்தனைகள் பற்றிய தகவல்களையும் பெறுவார்கள்.

2 /5

உங்கள் டெபிட் / கிரெடிட் கார்டு திருடப்பட்டாலோ அல்லது தொலைந்துவிட்டாலோ அல்லது வேறு ஏதேனும் காரணத்திற்காக மூடப்பட வேண்டியிருந்தாலோ, வீட்டில் இருந்தபடி இந்த எண்ணை டயல் செய்து அதை மிக எளிதாகத் பிளாக் செய்யலாம். 

3 /5

எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் தங்களுக்கான புதிய காசோலை புத்தகத்தை தங்கள் வீட்டில் இருந்தபடியே ஆர்டர் செய்யலாம் மற்றும் அதன் நிலையை கண்காணிக்கலாம்.

4 /5

எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்கள் TDS அல்லது டெபாசிட் வட்டிச் சான்றிதழை வீட்டில் இருந்தபடியே மின்னஞ்சல் மூலம் பெறலாம். இதற்கு நீங்கள் எஸ்பிஐயின் தொடர்பு மையத்தை அழைக்க வேண்டும்.

5 /5

எஸ்பிஐயின் தொடர்பு மையத்தை அழைத்து வாடிக்கையாளர்கள் தங்களுக்கான புதிய ஏடிஎம் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம்.