எஸ்பிஐ-ன் இந்த திட்டங்களில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும்!

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி வழங்கக்கூடிய  மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலமாக திட்டத்தின் முதிர்வில் உங்களுக்கு சிறந்த வருமானம் கிடைக்கும்.

 

1 /4

கடந்த ஐந்து ஆண்டுகளில் எஸ்பிஐ ஸ்மால் கேப் ஃபண்ட், எஸ்பிஐ கான்ட்ரா ஃபண்ட் மற்றும் எஸ்பிஐ தொழில்நுட்ப வாய்ப்புகள் நிதி போன்ற மியூச்சுவல் ஃபண்டுகளின் வருடாந்திர வருமானம் 23 சதவீதமாக உயர்ந்துள்ளது.  

2 /4

தொழில்நுட்பம் மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான நிறுவனங்களில் பலவிதமான பங்குகள் மற்றும் பங்கு தொடர்பான பத்திரங்களில் முதலீடு செய்வதன் மூலம் முதலீட்டாளர்களுக்கு சிறந்த வருமானம் கிடைக்கப்பெறும்.  5 ஆண்டுகளுக்கு முன்பு இந்த திட்டத்தில் மாதம் ரூ.12,000 முதலீடு செய்திருந்தால் 84.47 சதவீதம் வருமானம் மூலம் உங்களுக்கு 5 ஆண்டுகளில் மொத்தமாக ரூ.7.2 லட்சம் கிடைத்திருக்கும்.  

3 /4

எஸ்பிஐ கான்ட்ரா ஃபண்ட் ஐந்தாண்டு காலத்தில் 95.16 சதவிகிதம் மற்றும் வருடாந்திர வருமானம் 14.3 சதவிகிதம் கிடைக்கும்.  இந்நிறுவனத்தின் தற்போதைய நிகர சொத்து மதிப்பு ரூ.241.69 கோடி. 5ஆண்டுகளுக்கு முன்பு, நீங்கள் எஸ்பிஐ கான்ட்ரா ஃபண்டில் மாதம் ரூ.12,000 முதலீடு செய்திருந்தால் 79.31 சதவீதம் வருமானம் மூலம் 5 ஆண்டுகளில் உங்களுக்கு மொத்தமாக ரூ. 7.2 லட்சம் கிடைத்திருக்கும்.  

4 /4

எஸ்பிஐ ஸ்மால் கேப் ஃபண்ட் ஐந்து ஆண்டுகளில் 84.28 சதவிகிதம் மற்றும் வருடாந்திர வருமானம் 14.29 சதவிகிதம் வருமானம் கிடைக்கும்.  இந்நிறுவனத்தின்  தற்போதைய நிகர சொத்து மதிப்பு ரூ.124.7 ஆகும். வருடாந்திர வருமானம் 7.57 சதவிகிதம் மற்றும் 13.65 சதவிகித வகை சராசரி வருமானம் ஆகிய இரண்டையும் விட அதிகமாக உள்ளது.