சூரியன் குளிர்ந்து போகும் நாள் வருமா; பூமி என்ன வாகும்; விஞ்ஞானிகள் கூறுவது என்ன!

ஆற்றலில் ஆதாரமாக இருக்கு சூரியன் குளிர்ந்து போனால், பிரபஞ்சத்திற்கு என்ன ஆகும் என நினைத்தாலே பீதி உணர்வு வருகிறது அல்லவா... பூமிக்கு சூரிய சக்தியே ஆதாரமாக இருக்கும் நிலையில், அதன் பின்னர் பூமியும் அழிந்து போகும் என்கின்றனர் விஞ்ஞானிகள். 

1 /6

ஹார்வர்ட் கல்லூரி ஆய்வகம், ஸ்மித்சோனியன் வானியற்பியல் ஆய்வுக்கூடம் மற்றும் வானியற்பியல் மையம் ஆகியவற்றின் விஞ்ஞானிகள் அடுத்த 5 பில்லியன், அதாவது 500 கோடி  ஆண்டுகளில் நமது சூரியன் முழுமையாக குளிர்ந்துவிடும் என்று கணித்துள்ளனர். சூரியன் தற்போது நடு நிலையில் இருப்பதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 

2 /6

சூரியனில் நிகழும் அணுக்கரு வினையின் படி இந்த தேதியை விஞ்ஞானிகள் கணக்கிட்டுள்ளனர். இந்த திட்டத்தில் பணிபுரியும் விஞ்ஞானி பாவோலா டெஸ்டா, அணுசக்தி எதிர்வினையின் அடிப்படையில் இந்த கணக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று கூறினார்.  

3 /6

1930 ஆம் ஆண்டுக்கு முன், சூரியனின் சக்தி, ஈர்ப்பு விசையிலிருந்து வருகிறது என்று நம்பப்பட்டது என்று பாவ்லா டெஸ்டா கூறினார். அறிவியலால் இன்னும் பல விஷயங்களை அறிய முடியவில்லை என்றாலும், தற்போது அணுசக்தி பற்றி விஞ்ஞானிகள் அறிந்து கொண்டுள்ளனர். 

4 /6

சூரியன் தற்போது அணுசக்தியால் எரிகிறது என்று பாவ்லா டெஸ்டா கூறினார். அணுசக்தி மறையும் நாளில், அதே நாளில் நமது சூரியன் முற்றிலும் எரிந்து சாம்பலாகிவிடும், என்கின்றனர் விஞ்ஞானிகள்.  

5 /6

சூரியன் அழியும் நாளில் நமது பூமியும் அழியும் என்று விஞ்ஞானிகள் தங்கள் ஆய்வில் கூறியுள்ளனர். பூமி அதன் உயிர்வாழ்வதற்கு சூரியனை மட்டுமே சார்ந்து இருப்பதால்  சூரியன் அழிந்தவுடன் பூமியும் அழியும். இது நடக்க இன்னும் 5 பில்லியன், 500 கோடி  ஆண்டுகள் உள்ளன.

6 /6

சூரியனை சக்தியின் முக்கிய ஆதாரமாகக் கருதுகிறோம். நமது சூரிய குடும்பத்தின் மையம் சூரியன், ஆனால் பிரபஞ்சத்தில் சூரியனை விட பல மடங்கு பெரிய நட்சத்திரங்கள் உள்ளன. பல நட்சத்திரங்கள் சூரியனை விட 100 மடங்கு பெரியவை என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.