டயட் எதுவும் தேவையில்லை... ஒரே மாதத்தில் தொப்பை கரைய ‘இதை’ கடைப்பிடிங்க போதும்

Simple Lifesyle Changes To Burn Belly Fat : இன்றைய காலகட்டத்தில் பலருக்கு ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளது. அதனால் தங்கள் உடல் எடையை குறைக்க பல்வேறு முயற்சிகளை எடுக்கிறார்கள்.

உடல் பருமன் ஒரு நோய் இல்லை என்றாலும், அது பல்வேறு விதமான நோய்களுக்கு காரணமாகி விடுகிறது. எனவே உடல் எடையை கட்டுக்குள் வைத்திருப்பது ஆரோக்கியமான வாழ்விற்கு மிகவும் அத்தியாவசியமான ஒன்று.

1 /9

உடல் பருமன் மற்றும் தொப்பையை குறைக்க, பலர் ஜிம் பயிற்சி, கடுமையான டயட் ஆகியவற்றை பின்பற்ற வேண்டும் என எண்ணுகின்றனர். ஆனால் இவை, பலருக்கு சில ஆபத்தான பின் விளைவுகளை ஏற்படுத்துகிறது. நம் அன்றாட வாழ்க்கை முறையில் எளிய மாற்றங்கள் செய்தாலே உடல் எடையை பக்காவாக குறைக்கலாம்.

2 /9

டீடாக்ஸ் பானம்: காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில், சிறந்த டீடாக்ஸ் பானம் அல்லது வளர்ச்சிதை மாற்றத்தை தூண்டும் பானங்களை உட்கொள்ள வேண்டும். இஞ்சி எலுமிச்சை பானம், அல்லது சீரக நீர் போன்ற சில பானங்களை தேர்ந்தெடுத்து அருந்துவது பலன் கொடுக்கும்.

3 /9

காலை உணவு: உங்கள் காலை உணவு அந்த உங்களுக்கு ஆற்றலை அள்ளிக் கொடுக்கும் விதமாக, அனைத்து ஊட்டச்சத்துக்களும் நிறைந்ததாக இருக்க வேண்டும். அதோடு அடிக்கடி பசி ஏற்படாமல் வயிறு நிறைந்த உணர்வை தரக்கூடியதாக இருக்க வேண்டும். அதற்கு சிறு தானியங்கள், காய்கறிகள், பழங்கள், நட்ஸ் வகைகள் ஆகியவற்றை சேர்க்க வேண்டும்.

4 /9

மதிய உணவு: மதிய உணவு சிறிது லைட்டாக இருக்கலாம். அரிசி கோதுமை உணவுகளை குறைத்துக் கொண்டு, காய்கறிகள் மற்றும் பருப்பு சேர்த்து செய்த உணவுகளை அதிகம் சாப்பிடுவதால், அடிக்கடி பசி ஏற்படாமல் இருக்கும். இதனால் உடல் பருமன் குறையும்

5 /9

சிற்றுண்டி உணவுகள்: மாலையில் சிறிய பசிக்கு, பொரித்த உணவுகள் அல்லாமல், புரதம் நிறைந்த சுண்டல் வகைகள், முளைக் கட்டிய தானியங்கள், உலர் பழங்கள், இவற்றை எடுத்துக் கொள்வதால், உடல் பருமன் குறைவதோடு மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும்.

6 /9

இரவு உணவு: இரவு உணவு எளிதில் ஜீரணிக்க கூடிய வகையிலான எளிய உணவுகளாக இருக்க வேண்டும். ஜீரணிக்க கடினமான உணவுகளை தேர்ந்தெடுப்பது நல்ல பலனை கொடுக்காது. அதோடு இரவு உணவை 7:30  மணிக்கு முன்னதாக முடித்துக் கொள்வது சிறப்பு.

7 /9

நடைபயிற்சி அல்லது உடல் பயிற்சி: உடற்பயிற்சி உங்களால் முடிந்த அளவில் எளிய உடற்பயிற்சி அல்லது நடைப்பயிற்சி கட்டாயம் தேவை.. அப்படி நேரமில்லை என்றால், தேவைப்படும் இடத்தில் கலெக்டர் பயன்படுத்தாமல், படிக்கட்டுகளில் ஏறி இறங்குவது, தொலைபேசியில் பேசும்போது நடந்து கொண்டே பேசுவது, முடிந்த அளவு உடல் செயல்பாடுகளை அதிகரிக்கலாம்.

8 /9

நல்ல தூக்கம்: உடல் எடை குறைய நல்ல தூக்கம் அவசியம். ஆழ்ந்த ஆறு முதல் ஏழு மணி நேரம் வரையிலான தூக்கம் இல்லை என்றால், மன அழுத்தம் மனசோர்வு உண்டாகி, உடல் பருமன் அதிகரிக்கும்.

9 /9

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.