உருளைக்கிழங்கு சாற்றை தினமும் முகத்தில் தடவினால் இவ்வளவு நன்மைகளா?

முகத்தில் ஏற்படும் பருக்கள் தொடங்கி, கருவளையங்கள் வரை உருளைக்கிழங்கு சாற்றை தினசரி முகத்திற்கு தடவி வந்தால் பல நன்மைகள் கிடைக்கிறது.

1 /6

உருளைக்கிழங்கை உணவுகளில் அதிகம் பயன்படுத்தி இருப்போம். ஆனால் அதன் சாற்றை முகத்திற்கு பயன்படுத்தி வந்தால் ஏகப்பட்ட நன்மைகளை அளிக்கிறது.

2 /6

உருளைக்கிழங்கு சாறு சருமத்தின் பளபளப்பிற்கு உதவுகிறது. இவற்றை தினசரி பயன்படுத்தும் போது தோலின் நிறமும் மாறுகிறது.

3 /6

இவற்றில் என்சைம்கள் மற்றும் வைட்டமின் சி உள்ளதால் முகத்தை மேலும் பளபளப்பாக மாற்றுகிறது. மேலும் கருப்பாக இருக்கும் இடங்களை சரி செய்கிறது.

4 /6

உருளைக்கிழங்கு சாற்றில் உள்ள நல்ல பண்புகள் கண்களைச் சுற்றி ஏற்படும் கருவளையங்களை குறைத்து பளபளப்பாக மாற்றுகிறது. மேலும் கண்களை சுற்றி ஏற்படும் வீக்கங்களையும் சரி செய்கிறது.

5 /6

தினசரி உருளைக்கிழங்கு சாற்றை முகத்தில் தடவி வந்தால் முகப்பரு, கரும்புள்ளிகள் போன்றவற்றை மறைய செய்யும். மேலும் எண்ணெய் உற்பத்தியை குறைக்க உதவுகிறது.  

6 /6

உருளைக்கிழங்கு சாறு இயற்கையான டோனராக செயல்படுகிறது. இது சருமத்தில் உள்ள எண்ணெய் பசைகளை எடுக்கிறது மற்றும் ஈரப்பதமாக வைத்து கொள்கிறது.