Optical Illusion: மூளையை குழப்பும் ஒளியியல் மாயை புகைப்படங்கள்

ஒளியியல் மாயை: ஆப்டிகல் மாயையுடன் கூடிய படங்கள் சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகின்றன. இந்தப் படங்களைப் பார்த்து பலர் குழப்பிப் போகிறார்கள். எனினும் இவை சுவாரஸ்யங்கள் நிறைந்தவை. 

1 /5

இந்த புகைப்படத்தை பார்க்கும் போது, இது ஒரு வெல்வெட் போர்வை போல தோன்றும்,  ஆனால் கூர்ந்து கவனித்தால் இது ஷார்பே இனத்தை சேர்ந்த நாயின் வாய் என்பது புரியும்.

2 /5

இந்த புகைப்படத்தை பார்க்கும் போது, ​​​​அடுக்கி வைக்கப்பட்ட கூடுதல் செங்கலாக இருக்கலாம் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் அது சுவரில் வைக்கப்பட்ட சுருட்டு.

3 /5

இந்தப் படத்தை பார்த்தால் பலருக்கு தவளை தென்படக்கூடும். ஆனால், கூர்ந்து கவனித்தால் இவை காபியில் தோன்றும் நுரைகள் மற்றும் குமிழ்கள் என்பதை உணரலாம். 

4 /5

பல முகங்களைக் கொண்ட இந்தப் படத்தைப் பார்த்து,  குழப்பம் அடைய வேண்டாம். இது ஒப்பனை கலைஞர் மிமி சோயின் கைவணத்திலான மேக்கப்

5 /5

இந்த படம் ஒரு நேரடி இசை நிகழ்ச்சி போல் தெரிகிறது. ஆனால் இது ஒரு பருத்தி வயலின் புகைப்படம்.