Sun Transit In November: கிரகங்களின் ராஜா என்று அழைக்கப்படும் சூரியன், தனது ராசி மாற்றிக் கொண்டு பெயர்ச்சியாகும் போது, தமிழ் மாதம் பிறக்கிறது. அந்த வகையில், தற்போது விருச்சிக ராசியில் சூரியன் பெயர்ச்சியான நிலையில் கார்த்திகை மாதம் தொடங்கியுள்ளது.
சூரியன் ஒரு ராசியில் இருக்கும் அதே நேரத்தில், தனது நட்சத்திரங்களையும் மாற்றிக் கொள்கிறார். அந்த வகையில், நேற்று அவர் அனுஷ த்தில் பெயர்ச்சியாகி உள்ளார். இதனால் சில ராசிகள், அதிர்ஷ்ட பலன்களை பெற்று, பணபலம் செல்வ பலம், மகிழ்ச்சியான வாழ்க்கை அனைத்தையும் பெறுவார்கள் என்று ஜோதிடர்கள் கூறுகின்றனர்.
சூரியன் பெயர்ச்சி: தற்போது விருச்சிக ராசியில் உள்ள சூரிய பகவான், 27 நட்சத்திரங்களில் 17 வது நட்சத்திரமான அனுஷ நட்சத்திரத்தில் பெயர்ச்சியாகி உள்ளார். அனுஷ நட்சத்திரத்தில், வரும் டிசம்பர் இரண்டாம் தேதி வரை நீடித்திருப்பார். சூரியனின் இந்த நட்சத்திர சில ராசிகளுக்கு மிகவும் அனுகூலமாக இருக்கும்.
சூரிய பகவான்: சூரியன் சஞ்சரிக்கும், அனுஷ நட்சத்திரத்தின் அதிபதி சனி பகவான். தற்போது சனி பகவானும் வக்ர நிவர்த்தி அடைந்துள்ளார். இந்நிலையில், சூரியன் மற்றும் சனி பகவானின் அருளால், வாழ்க்கையில் அனுகூலமான மாற்றங்களை சந்திக்க போகும் சில ராசிகளை பற்றி அறிந்து கொள்ளலாம்.
மேஷம்: சூரியன் மற்றும் சனி பகவானின் அருளால், மதிப்பு கௌரவம் அதிகரிக்கும். கடின உழைப்பின் பலன் கிடைக்கும். பயண வாய்ப்புகள் உருவாகும். அதனால் ஆதாயமும் கிடைக்கும்.
மிதுனம்: சூரியன் மற்றும் சனி பகவானின் அருளால், வேலையில் தொழிலில் வியாபாரத்தில் முன்னேற்றத்தை காணலாம். குறிக்கோள்கள் நிறைவேறும். ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும். பண வரவு மனமகிழ்ச்சியை தரும். திட்டமிட்டபடி பணிகளை நிறைவேற்ற முடியும்.
கன்னி: ராசி சூரியன் மற்றும் சனிபகவானின் அருளால், கடின உழைப்பிற்கு பலன் கிடைக்கும். உங்கள் முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு இருக்கும். முதலீடுகள் மூலம் நல்ல வருமானம் கிடைக்கும். பண வரவு மகிழ்ச்சி கொடுக்கும். நண்பர்களால் ஆதாயம் கிடைக்கும்.
தனுசு: சூரியன் மற்றும் சனி பகவானின் அருளால் எதிரிகளை வீழ்த்தி வெற்றி அடைவீர்கள். வருமானம் சிறப்பாக இருக்கும். பணியிடத்தில் நிலைமை சாதகமாக இருக்கும். புதிய வாய்ப்புகள் மூலம் வாழ்க்கையில் முன்னேற்றம் காண்பீர்கள். தடைகள் விலகும்.
மீனம்: சூரியன் மற்றும் சனிஸ்வரனின் அருளால், வாழ்க்கையில் நல்ல முன்னேற்றங்களை காணலாம். சமூக பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். இதனால் மனதிருப்தி உண்டாகும். வெளிநாட்டிற்கு செல்ல திட்டமிடுபவர்களின் முயற்சிகள் வெற்றி பெரும். நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும்.
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.