துஷ்ட சக்திகள் செய்வினை சூனியம் அகல வேண்டுமா? ஞாயிற்றுக்கிழமை சூரிய பகவான் வழிபாடு!

Sunday Sun Worship Importance : பிரபஞ்சத்துக்கே ஆற்றலைத் தரக்கூடிய சூரிய பகவானை வழிபடுபவர்கள் சீரும் சிறப்புமாய் வாழ்வார்கள். அதற்குரிய போதுமான ஆற்றலை தந்து வெற்றி பெற சூரிய பகவான் அருள் புரிவார்.

அதிலும், சூரியனுக்கு உரிய ஞாயிற்றுக்கிழமையில் விரதமிருந்து சூரிய பகவானை வழிபட்டால், எதிரிகளே இல்லாத வாழ்வு வாய்க்கும்...  

1 /7

சூரியனுக்கு ஞாயிற்றுக்கிழமைகளில் விரதம் இருந்தால், ஆயுள் நீடிக்கும் என்றும் கொடிய நோய்கள் ஏதும் அண்டாது என்றும் சொல்வார்கள். ஏனென்றால், தந்தையை வணங்குபவர்களை, சூரிய புத்திரர் எமதர்மராஜா விரைவில் அணுகுவதில்லை

2 /7

சூரியன் என்றாலே பிரகாசமானவர் என்று அர்த்தம். சூரியனை வழிபட்டால் சமூகத்தில் பிறரின் மதிப்பைப் பெற்று பிரபலமாகும் யோகம் ஏற்படும்

3 /7

தேரில் பவனி வரும் சூரியனை ஞாயிறன்று வழிபட்டா, பொழுதுபோக்குகள், மனம் மகிழும் நிகழ்ச்சிகளில் கலந்துக் கொண்டு வாழ்க்கையை அனுபவிக்கும் வாய்ப்புகள் கிட்டும்

4 /7

ஞாயிறன்று சூரியனுக்கு விரதம் இருப்பவர்கள் காலையில் சூரிய உதயத்துக்கு முன் எழுந்து நீராடிவிட்டு, சூரியனுக்கு அர்க்கியம் சமர்ப்பிக்க வேண்டும்

5 /7

விளக்கை ஏற்றிக் சூரியன் உதிக்கும் கிழக்கு திசை நோக்கி வைத்துக் கொள்ளவும். சிறிய பஞ்சபாத்திரத்தில் தண்ணீரை எடுத்து சூரிய பகவானை நோக்கி வணங்கியவாறே தீர்த்தம் போல கிழக்கு திசையில் தெளிக்க வேண்டும்.

6 /7

காலை முதல் மாலை வரை சாப்பிடாமல் விரதம் இருக்கவும். மாலையில் சூரிய அஸ்தமனத்துக்கு முன்பாக உண்ண வேண்டும். ஆனால், சூரியன் அஸ்தமித்த பிறகு உணவு உண்ணக்கூடாது  

7 /7

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை.பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்ட இந்தத் தகவல்களுக்கு ஜீ நியூஸ் பொறுப்பேற்காது