Rakul Preet Singh: காதலரை கரம் பிடித்தார் ரகுல் ப்ரீத் சிங்! மாப்பிள்ளை யார் தெரியுமா?

Rakul Preet Singh Jackky Bhagnani Marriage : ரகுல் ப்ரீத் சிங், தனது காதலர் ஜாக்கி பகானியை திருமணம் செய்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. 

Rakul Preet Singh Jackky Bhagnani Marriage Pics: தமிழ் திரையுலகின் முக்கிய நடிகைகளில் ஒருவராக இருப்பவர், ரகுல் ப்ரீத் சிங். இவர், கடந்த சில ஆண்டுகளாக ஜாக்கி பகானி என்பவரை காதலித்து வந்தார். இந்த நிலையில், இவர்களுக்கு திருமணம் நடைப்பெற்றுள்ளது. இந்த புகைப்படங்கள் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. 

1 /7

தமிழ் திரையுலகில் முக்கிய நடிகராக இருப்பவர், ரகுல் ப்ரீத் சிங். இவர், 2009ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளியான கில்லி படத்தில் அறிமுகமானார்.

2 /7

தமிழில் இவர் முதன் முதலாக நடித்த படம், யுவன். அதன் பிறகு தடையற தாக்க, புத்தகம், என்னமோ ஏதோ உள்ளிட்ட படங்களில் நடித்தார். 

3 /7

2017ஆம் ஆண்டு வெளியான ஸ்பைடர் படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். இவரது கதாப்பாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது. அதன் பிறகு, தீரன் அதிகாரம் ஒன்று படத்திலும் குழந்தை தனமான கதாப்பாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தது. 

4 /7

தொடர்ந்து தமிழில் சூர்யா, கார்த்தி உள்ளிட்டோருடன் ஜோடியாக சேர்ந்து நடித்தார். தமிழில் மட்டுமன்றி அவ்வப்போது பாலிவுட்டிலும் தலைக்காட்டி வந்தார், ரகுல். 

5 /7

ரகுல் ப்ரீத் சிங், ஜாக்கி பகானி என்பவரை கடந்த 2021ஆம் ஆண்டு முதல் டேட்டிங் செய்து வந்தார். இதையடுத்து இவர்களின் திருமணம் தற்போது நடைப்பெற்றுள்ளது. 

6 /7

ரகுல்-ஜாக்கியின் திருமணம், கோவாவில் உள்ள ஒரு பிரபல ஹோட்டலில் நடைப்பெற்றுள்ளது. சூரியன் அஸ்தமனமாகும் சமயத்தில் இந்த திருமணம் நடைப்பெற்றுள்ளது. ஜாக்கி பகானி, சில இந்தி படங்களில் நடித்துள்ளார். இவர் படங்களின் தயாரிப்பாளராகவும் சுய தொழில் செய்பவராகவும் உள்ளார். 

7 /7

ஜாக்கி-ரகுல் திருமண புகைப்படங்கள் தற்போது வைரலாகி வரும் நிலையில், இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.