Nutritional deficiencies In Vegan: உணவில் சைவமா அசைவமா எது சிறந்தது என்ற கேள்விக்கு சைவம் என்று பதில் சொன்னவர்கள் படிக்க வேண்டிய கட்டுரை இது... சைவ உணவு பாதிப்புகளை ஏற்படுத்தாவிட்டாலும், உடலில் பல ஊட்டச்சத்து குறைபாடுகளை ஏற்படுத்திவிடும்
உணவே மருந்து என்று சொல்பவர்களில் பலர், சைவ உணவே உடலுக்கு நல்லது என்று போர்க்கொடி தூக்குவார்கள். ஆனால், உண்மை என்ன தெரியுமா? இது நிதர்சனமான அசைவ உணவு கூறும் ஊட்டச்சத்து உண்மை
உடல்நலப் பிரச்சினைகள் மற்றும் வாழ்க்கை முறைகளினால் ஏற்படும் நோய்களைத் தவிர்க்க, அவரவர் உடலுக்கு ஏற்றாற்போல சைவ/அசைவ உணவைப் பின்பற்ற அறிவுறுத்தப்படுகிறது என்றாலும், உலகம் முழுவதும் உள்ள மக்கள் படிப்படியாக சைவ உணவை ஏற்றுக்கொள்ள தொடங்கிவிட்டார்கள். ஆனால், சைவ உணவே ஆரோக்கியத்திற்கு போதுமானதா என்ற கேள்விக்கு என்ன பதில்? அதிலும், சைவ உணவு உண்பவர்களுக்கு புரதச் சத்து குறைபாடு மிகப் பெரிய பிரச்சனையாக மாறுகிறது
வைட்டமின் பி 12 மற்றும் இரும்புச்சத்து குறைபாடு தாவர அடிப்படையிலான உணவுகளை உட்கொள்பவர்களுக்கும் மிகவும் பொதுவானது. இதன் காரணமாக, பலவீனம் மற்றும் இரத்த சோகை போன்ற பாதிப்புகல் ஏற்படும்
நமது உடலில் வைட்டமின் டி குறையும் போது, எலும்பு வலி மற்றும் மனச்சோர்வு போன்ற நோய்கள் ஏற்படுகிறது, எலும்புகள், நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் நல்ல மன ஆரோக்கியத்திற்கு வைட்டமின் டி தேவைப்படும் நிலையில், சைவ உணவு உண்பவர்களுக்கு வைட்டமின் டி குறைபாடு அதிக அளவில் காணப்படுகிறது
கால்சியம் குறைபாடு குறிப்பாக சைவ உணவைப் பின்பற்றுபவர்களுக்கு ஏற்படும் பிரச்சனையாகும். பால் அல்லது பால் பொருட்களை தவிர்ப்பவர்களுக்கு கால்சியம் குறைபாடு அதிக அளவில் காணப்படுகிறது. கால்சியம் குறைவதால் எலும்புகளில் வலி உட்பட பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன
சைவ உணவு உண்பவர்களுக்கு ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் ஒமேகா-6 கொழுப்பு அமிலங்கள் உடலில் குறையலாம். EPA மற்றும் DHA போன்ற கூறுகள் வழக்கமான சைவ உணவில் இருப்பதில்லை. ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் வால்நட்ஸ், ஆளிவிதைகள் மற்றும் சியா விதைகள் போன்ற சைவ உணவுகளில் காணப்படுகின்றன. இவற்றை அவர்கள் எடுத்துக் கொண்டால் ஆரோக்கியமாக இருக்கலாம்
பொறுப்பு துறப்பு: இணையத்தில் பெறப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்ட இந்த கட்டுரையை ஒரு சுகாதார நிபுணரின் கருத்தாக கருத வேண்டாம். உடல் நலம் தொடர்பான எந்த பிரச்சனைகளுக்கும் தாமதிக்காமல் மருத்துவரை அணுகவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை