Sruthi Shanmuga Priya : பிரபல சீரியல் நடிகை ஷன்முக பிரியா, தனது இறந்து போன கணவரை நினைத்து அவ்வப்போது சில போட்டோக்களை பதிவிட்டு வருகிறார். இதை பார்த்த ரசிகர்கள் அவருக்கு அட்வைஸ் செய்திருக்கின்றனர்.
Sruthi Shanmuga Priya : தமிழ் சீரியல் நடிகைகளுள் பிரபலமானவராக விளங்குபவர் ஸ்ருதி ஷண்முக பிரியா. 2010ஆம் ஆண்டு ஒளிபரப்பான நாதஸ்வரம் சீரியல் மூலம் பிரபலமான இவர், தொடர்ந்து பிரபல தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் நடித்து வருகிறார். பாரதி கண்ணம்மா உள்ளிட்ட தொடர்களிலும் சில காலம் முக்கிய கதாப்பாத்திரமாக நடித்திருக்கிறார். இவருக்கும், உடற்பயிற்சி நிபுணர் அர்விந்த் சேகருக்கும் 2022ஆம் ஆண்டு திருமணம் நடைப்பெற்றது. ஆனால், திருமணமான 1 ஆண்டிலேயே மாரடைப்பு காரணமாக கடந்த ஆண்டு உயிரிழந்தார்.
நாதஸ்வரம் தொடர் மூலம் பிரபலமான சீரியல் நடிகை ஸ்ருதி ஷண்முக பிரியா. தொடர்ந்து பல பிரபலமான சீரியல்களில் நடித்திருக்கிறார்.
தொலைக்காட்சி தொடர்கள் மட்டுமன்றி, இன்ஸ்டாகிராம் தளம் மூலமாகவும் பிரபலமாக வலம் வருகிறார்.
ஸ்ருதிக்கும், உடற்பயிற்சி நிபுணர் அர்விந்த் சேகருக்கும் 2022ஆம் ஆண்டு திருமணம் நடைப்பெற்றது.
ஸ்ருதி-அர்விந்த் திருமணம் காதல் திருமணம் ஆகும். இருவரும் திருமண வாழ்க்கைக்கு பிறகு மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர். அவ்வப்போது ரீல்ஸ் செய்தும் பதிவிட்டு வந்தனர்.
கடந்த ஆண்டு ஆக்ஸ்டு மாதம் 4ஆம் தேதி எதிர்பாராத விதமாக அர்விந்த் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
இந்த செய்தி, ஷண்முக பிரியாவின் ரசிகர்கள் மற்றும் தொலைக்காட்சி பிரபலங்களையும் சோகத்தில் ஆழ்த்தியது. தனது கணவரின் இறப்புக்கு காரணம் மாரடைப்புதான் என்று கூறிய ஷண்முக பிரியா, தேவையற்ற தகவல்களை ஊடகங்கள் பரப்ப வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்.
தன் கணவருடைய இறப்பிற்கு பின்பும் தொடர்ந்து அவருடன் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார், ஷண்முக பிரியா.
இதை பார்த்த அவரது ரசிகர்கள், அவர் இந்த உலகில் இல்லை என்பதை நீங்கள் நம்ப வேண்டும் என்றும், “இன்னும் அவர் உயிருடன் இருப்பது போல நீங்கள் நடந்து கொள்கிறீர்கள், இது நல்லதல்ல” என்றும் அட்வைஸ் செய்து வருகின்றனர்.