மது பிரியர்களே! இன்று முதல் 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை!

Tasmac closed: சட்டம் ஒழுங்கு பிரச்சனையை தடுக்கும் வகையில் தமிழகத்தில் சில பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு 3 நாட்கள் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு. 
1 /6

தமிழ்நாட்டில் மொத்தம் 4,829 டாஸ்மாக் கடைகள் உள்ளது. இதன் மூலம் ஒரு நாளும் சுமார் 100 முதல் 120 கோடி ரூபாய் வரை வருமானம் பெறுகிறது தமிழக அரசு. இந்த பணத்தின் மூலம் அரசு முக்கிய திட்டங்களுக்கு செலவு செய்கிறது.     

2 /6

தமிழகத்தில் தீபாவளி, பொங்கல் என பெரிய பண்டிகைகள் எது நடந்தாலும், டாஸ்மாக் கடைகள் எப்போதும் மூடப்படுவதில்லை. இருப்பினும் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு ஆண்டுதோறும் 8 நாட்கள் விடுமுறை அளிக்கப்படுகிறது.   

3 /6

திருவள்ளுவர் தினம், குடியரசு தினம், மகாவீர் ஜெயந்தி, வடலூர் ராமலிங்கர் நினைவு தினம், மே தினம், சுதந்திர தினம், நபிகள் நாயகம் பிறந்த நாள், காந்தி ஜெயந்தி போன்ற சிறப்பு நாட்களில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.   

4 /6

மேலும் குரு பூஜை போன்ற விசேஷங்களுக்கு அந்தந்த பகுதிகளில் சட்டம் ஒழுங்கு பிரச்சனையை சரி செய்ய சில மாவட்டங்களுக்கு மட்டும் டாஸ்மாக் கடைகள் விடுமுறை அளிக்கப்படுகிறது.   

5 /6

அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் சவேரியார் கோயிலில் பெரிய திருவிழா நடைபெற உள்ளதால் இன்று முதல் மூன்று நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடப்படும்.   

6 /6

கன்னியாகுமரி மாவட்டம் சவேரியார் கோவில் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகள், மதுபான பார்கள், ஓட்டல் பார்கள் என மதுபானம் விற்கப்படும் இடங்கள் அனைத்தும் மூடப்படும் என ஆட்சியர் முடிவு செய்துள்ளார். இன்று டிசம்பர் 1 ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 3 ஆம் தேதி வரை இந்த விடுமுறை நீடிக்கும்.