செல்போன் சார்ஜ் செய்யும் போது ‘இந்த’ தவறை செய்யாதீங்க... பேட்டரி காலி ஆகி விடும்..!!

Smartphone Charging Tips: நமது அன்றாட வாழ்க்கையில் ஸ்மார்ட்போன் என்பது, உணவு உடை போன்ற அத்தியாவசிய பொருளாக மாறி விட்டது ஸ்மார்ட்போன் இல்லாமல் சில நிமிடங்கள் கூட நம்மால் வாழ முடியாது என்ற நிலை உள்ளது. 

ஸ்மார்ட்போனை சரியான நிலையில் இருக்க அதன் பேட்டரி நன்றாக இருக்க வேண்டும் நாம் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். நமது போன் சரியாக வேலை செய்யவில்லை என்றாலோ, பழுதாகிவிட்டாலோ, நமது முக்கியமான பல வேலைகள் நின்றுவிடும்.

1 /8

ஸ்மார்ட்போன் என்பது தொலை தொடர்பு சாதனம் மட்டுமல்ல, பணப் பரிவர்த்தனை முதல், முக்கிய ஆவணங்கள் பரிமாறிக் கொள்வது, பொழுதுபோக்கு அம்சம் என, எல்லா முக்கியப் பணிகளையும் ஸ்மார்ட்போன்கள் மூலமாகவே மேற்கொள்கிறோம். 

2 /8

உங்கள் ஸ்மார்ட்போன் பேட்டரி சார்ஜ் செய்யும் போது, உங்களில் சில தவறுகளால், உங்கள் தொலைபேசியின் பேட்டரி ஆயுளையும், பேட்டரியின் பவர் பேக் அப்  திறனை பெரிதும் பாதிக்கலாம். எனவே சில விஷயங்கள் கவனத்தில் கொள்வது அவசியம்.

3 /8

80-20 விதி: ஸ்மார்ட்போனை சார்ஜ் செய்யும் போது, ​​80-20 விதியை நாம் பின்பற்ற வேண்டும். எந்நேரமும் தொலைபேசியை சார்ஜ் போட்டு விட்டு கண்டு கொள்ளாமல் இருப்பவர்கள் ஏராளம்.

4 /8

பேட்டரி ஆயுட்காலம்  அதிகரிக்க: பேட்டரி ஆயுட்காலம் நீடிக்க தொலைபேசியை சார்ஜிங்கில் வைத்து, அது முழுவதுமாக சார்ஜ் ஆகும் வரை வைத்திருக்காமல், ஃபோன் 90 அல்லது 95 சதவிகிதம் சார்ஜ் செய்யப்பட்டவுடன் அதனை சாரிஜிங்கில் இருந்து எடுத்து விட வேண்டும்

5 /8

உங்கள் ஃபோன் பேட்டரி நீடித்து இருக்க, பேட்டரி 80 சதவீதம் வரை மட்டுமே சார்ஜ் செய்யும் பழக்கம் இருந்தால், அது சிறந்த பேட்டரி ஆயுளை நீடிக்கும், பவர் பேகப் சிறப்பாக இருக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

6 /8

பேட்டரி பவர் முழுமையாக தீரும் வரை கண்டுகொள்ளாமல் பல பயனர்கள் அதன் பேட்டரி முற்றிலும் செயலிழக்கும் வரை தொலைபேசியைப் பயன்படுத்துகின்றனர். பேட்டரி முற்றிலும் செயலிக்கும் வரை காத்திருக்கக் கூடாது.

7 /8

நீங்கள் போனின் பேட்டரி ஆயுளை அதிகரிக்க விரும்பினால், போனின் பேட்டரி பவர் 20 சதவீதத்திற்கு கீழே போக விடாதீர்கள். ஃபோனின் பேட்டரி 20 சதவீதத்திற்கும் குறைவாக இருக்கும் போதே, அதை சார்ஜ் செய்வது சிறப்பு

8 /8

80-20 விதி: ஃபோன் சார்ஜ் செய்ய மேலே கூறப்பட்ட 80-20 விதியைப் பின்பற்றினால், தொலைபேசியின் பேட்டரி ஆயுளையும் அதிகரிக்கலாம் என்பதோடு, பேட்டரியின் பவர் பேக் அப்பும் சிறப்பாக இருப்பதைக் காண்பீர்கள்.