இளநீர் எப்போதும் பெண்களின் ஆரோக்கியத்திற்கு சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. கர்ப்ப கால பிரச்சனைகள் முதல், சிறு நீர் பாதை தொற்று வரை உடலின் பல பிரச்சனைகளுக்கு இளநீர் ஒரு சஞ்சீவியாக கருதப்படுகிறது. இதில் பொட்டாசியம், சோடியம் மற்றும் கால்சியம் அதிகம் உள்ளதால் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.
இளநீர் ஒரு டையூரிடிக் என்று கருதப்படுகிறது. UTI எனப்படும் சிறு நீர் பாதை தொற்று இருந்தால், அடிக்கடி சிறுநீர் கழிக்க நேரிடும். மேலும், சிறுநீர் கழிக்கும் போது வலி மற்றும் எரிச்சல் உணர்வும் தோன்றும். இளநீர் இந்த சிக்கலை தீர்க்கிறது.
சிறுநீர்ப்பையில் உள்ள பாக்டீரியாக்களை சுத்தம் செய்ய இளநீர் உதவுகிறது. UTI தொற்றில், சிறுநீர்ப்பை பாக்டீரியா சிறுநீரில் எரியும் உணர்வை அதிகரிக்கிறது. இப்படிப்பட்ட நிலையில் இளநீர் குடிப்பதால் உடலில் சோடியத்தின் அளவு அதிகரித்து சிறுநீர் எளிதாக வெளியேறும். இதன் காரணமாக, சிறுநீர்ப்பையில் உள்ள பாக்டீரியா எளிதில் வெளியேற்றப்படுகிறது.
இளநீர் ஒரு பாக்டீரியா எதிர்ப்பு சக்தியாக செயல்படுகிறது. இதனால் யுடிஐயின் போது உடலில் ஏற்படும் பலவீனத்தை குறைக்கிறது. அடிக்கடி சிறுநீர் கழிப்பதால், நீரிழப்பு காரணமாக கால்கள் மற்றும் கைகளில் eஎற்படும் விறைப்புத்தன்மை குறைகிறது.
UTI தொற்றால் எரிச்சலைக் குறைக்க இளநீர் உதவும். உண்மையில் இதை குடிப்பதால் உடலில் உள்ள நீரின் அளவு அதிகரித்து, சிறுநீர் எரியும் பிரச்சனையில் இருந்து விடுதலை கிடைக்கிறது.
இளநீர் உங்கள் PH அளவை சமநிலைப்படுத்த உதவுகிறது. pH சமநிலையற்றதாக இருக்கும்போது, தொற்று பெருகத் தொடங்குகிறது. அத்தகைய சூழ்நிலையில், இளநீர் உள்ள எலக்ட்ரோலைட் அதிகரித்த pH அளவை சமன் செய்கிறது.