பேட்டிங்கில் சொதப்பும் இந்தியா! இந்த 3 வீரர்களை தேர்வு செய்து இருக்கலாம்!

2024 டி20 உலகக்கோப்பையில் இதுவரை இந்தியா 2 போட்டிகளில் விளையாடி உள்ளது. அமெரிக்காவின் ஆடுகளத்திற்கு அணியில் தேர்வாகாத இந்த 3 வீரர்கள் அதிகம் உதவி இருக்க கூடும். 

 

1 /6

தற்போது டி20 உலக கோப்பை நடைபெற்று வரும் அமெரிக்காவின் ஆடுகளம் சற்று மெதுவாக உள்ளது. இதன் காரணமாக பேட்ஸ்மேன்களால் ரன்கள் அடிக்க முடியவில்லை.   

2 /6

அதே சமயம் பந்து வீச்சாளர்களுக்கு பிட்ச் சாதகமாக உள்ளது. இப்படிப்பட்ட அமெரிக்கா மைதானங்களில் சிறப்பாக விளையாட கூடிய உலக கோப்பைக்கு தேர்வாகாத வீரர்களை பற்றி பார்ப்போம்.   

3 /6

கலீல் அகமது: அமெரிக்காவில் உள்ள பிட்ச்களுக்கு கலீல் அகமது சிறப்பாக செயல்பட்டு இருக்க முடியும். அர்ஷ்தீப் சிங் நன்றாக பந்து வீசி இருந்தாலும் கலீல் கூடுதல் சிறப்பாக செயல்பட்டு இருக்க முடியும். அவர் தற்போது கூடுதல் வீரர்களின் பட்டியலில் உள்ளார்.   

4 /6

கேஎல் ராகுல்: 2023 ஒருநாள் உலகக் கோப்பையிலும் வேறு சில போட்டிகளிலும் இந்தியாவிற்காக சிறப்பாக விளையாடிய வீரர்களில் ஒருவர் கே எல் ராகுல். அவரது மிடில் ஆர்டர் பேட்டிங் இந்தியாவிற்கு அமெரிக்காவில் பெரிதும் உதவி இருக்கும்.   

5 /6

ரிங்கு சிங்: ரிங்கு சிங் எப்படிப்பட்ட ஒரு வீரர் என்பது அனைவரும் தெரிந்ததே. ஆனால் பேட்டிங் காம்பினேஷன் காரணமாக அவரால் டி20 அணியில் இடம்பெற முடியவில்லை.  

6 /6

தற்போது கூடுதல் வீரர்களின் பட்டியலில் இருக்கும் அவர் டெத் ஓவர்களில் இந்திய அணிக்கு உதவி இருக்க முடியும். குறிப்பாக பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் விக்கெட்கள் அடுத்தடுத்து விழுந்த போது ரிங்கு சிங் கூடுதல் ரன்கள் அடிக்க உதவி இருப்பார்.