கொஞ்சம் பிடிவாதம், கொஞ்சம் அடாவடித்தனம், அதிக உறுதி, அசால்ட் தைரியம் உள்ள ராசிகள் இவைதான்!!

Personality by Zodiac Sign: ஜோதிட சாஸ்திரத்தின் படி, சில ராசிக்காரர்கள் இயல்பிலேயே சாந்தகுணம் உள்ளவர்களாகவும், சிலர் பிறரை அடக்கி ஆளும் குணம் உள்ளவர்களாகவும் இருப்பார்கள். இது தவிர, சில ராசிகளை சேர்ந்தவர்கள் மிகவும் பிடிவாத குணம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். இந்த பதிவில், மிகவும் பிடிவாத குணம் கொண்ட, அடாவடித்தனம் அவ்வப்போது எட்டிப்பார்க்கும் ராசிக்காரர்களைப் பற்றி காணலாம். 

1 /4

ஜோதிட சாஸ்திரத்தின் படி, மேஷ ராசிக்காரர்கள் இயல்பிலேயே பிடிவாத குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். மேஷ ராசிக்காரர்களின் பிடிவாத குணம் மிக மோசமானது. அவர்கள் தங்கள் பிடிவாத குணத்தை சரியான திசையில் திருப்பினால், அவர்கள் வாழ்க்கையில் மிகவும் வெற்றிகரமான நபர்களாக மாற பல வாய்ப்புகளை பெறுவார்கள்.     

2 /4

ரிஷபம் ராசிக்காரர்கள் எந்த ஒரு வேலையிலும் வெற்றி பெற இரவு பகலாக முழு மனதுடன் ஈடுபடுவார்கள். இந்த ராசிக்காரர்கள் இயல்பிலேயே மிகவும் பிடிவாத குணமுடையவர்கள். எந்த வேலையை கையில் எடுத்தாலும் அதை முடித்த பிறகுதான் மூச்சு விடுவார்கள்.  

3 /4

துலாம் ராசிக்காரர்கள் உணர்ச்சிவசப்படுபவர்கள். இந்த ராசிக்காரர்களுக்கு வெற்றி பெற வேண்டும் என்ற ஆர்வம் இருக்கும். மேலும், இந்த ராசிக்காரர்களுக்கு எந்த பணியும் செய்ய முடியாத பணியாக தோன்றாது. அனைத்தையும் செய்து விடலாம் என்ற எண்ணமே கொண்டிருப்பார்கள்.   

4 /4

ஜோதிட சாஸ்திரப்படி விருச்சிக ராசிக்காரர்கள் மிகவும் நேர்மையானவர்கள், புத்திசாலிகள். இந்த ராசிக்காரர்கள் வாழ்க்கையில் ஏற்படும் சவால்களை புன்னகையுடன் ஏற்றுக்கொள்வார்கள். அதே சமயம் எடுக்கும் பணிகளில் வெற்றியையும் பெறுகிறார்கள். அவர்களின் உணர்ச்சிப்பூர்வமான இயல்புதான் அவர்களை மற்றவர்களிடமிருந்து பிரித்துக் காட்டுகிறது.