சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் 5 பழங்கள்

இந்தியாவை அச்சுறுத்தும் நோய்களில் சர்க்கரை நோயின் தாக்கம் மிகவும் அதிகம். இன்று வீட்டுக்கு ஒருவரையாவது இந்த நோயுடன் நம்மால் பார்க்க முடிகிறது. அதன்படி உங்களுக்கு நீரிழிவு நோய் இருந்தால், இரத்த சர்க்கரை அளவுகளில் திடீர் ஏற்ற இறக்கங்கள் ஏற்படும். பொதுவாக நீரிழிவு நோயாளிகள் தங்களின் உணவில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். மேலும், உணவில் இனிப்பு பொருட்களை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். அதுவே பழங்களைப் பற்றி பேசுகையில், பழங்களில் இயற்கையான இனிப்பு உள்ளது. அதனால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கிறது. நீங்கள் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த முயற்சிக்கிறீர்கள் என்றால், சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தக்கூடிய ஐந்து பழங்கள் எவை என்று தெரிந்துக்கொள்ளுங்கள். 

 

1 /5

கொய்யாப்பழத்தில் நார்ச்சத்து அதிகளவில் நிறைந்துள்ளது. இது குறைந்த கலோரி பழம். இது நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த உதவும். இதனை உட்கொள்வதான் மூலம் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுப்படுத்த முடியும். இது ஜீரணிக்க எளிதானது.  

2 /5

நிபுணர்களின் கூற்றுப்படி, ஆப்பிள் இன்சுலின் எதிர்ப்பிற்கு சிறந்த பழமாக கருதப்படுகிறது, ஏனெனில் இது உங்கள் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவுகிறது. 

3 /5

பப்பாளி இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த உதவுகிறது. பப்பாளியில் ஃபிளாவனாய்டுகள் நிறைந்துள்ளன. இது ஆரோக்கியமான எடையை பராமரிக்கவும் உதவுகிறது. 

4 /5

நாவல் பழம் ஒரு ஆயுர்வேத மருந்தாகும். இந்த பழம் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. இந்த கருமையான பழத்தில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மாவுச்சத்தை ஆற்றலாக மாற்ற உதவுகிறது. இந்த பழத்தை எந்த நேரத்திலும் உட்கொள்ளலாம்.

5 /5

நீரிழிவு நோயாளிகளுக்கு பீச் பழம் மிகவும் நன்மை பயக்கும். ஏனெனில் அதன் கிளைசெமிக் இண்டெக்ஸ் மிகவும் குறைவு. இந்த பழத்தில் உள்ள பயோஆக்டிவ் கூறுகள் இரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவுகிறது. இப்பழத்தில் கொழுப்புச் சத்தும் குறைவாக இருப்பதால் சர்க்கரை நோயாளிகளுக்கு இந்த பழம் சிறப்பு வாய்ந்தது.